கிரணிடம் கெஞ்சிய சுந்தர் சி... அந்த காட்சியில் நடிக்க சொல்லி 6 மாதம் நடந்த பேச்சுவார்த்தை...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 01, 2020, 06:09 PM IST
கிரணிடம் கெஞ்சிய சுந்தர் சி... அந்த காட்சியில் நடிக்க சொல்லி 6 மாதம் நடந்த பேச்சுவார்த்தை...!

சுருக்கம்

இந்நிலையில் தனது முதல் பிகினி அனுபவமான வின்னர் படத்திற்காக படக்குழுவினர் தன்னிடம் நடத்திய பேச்சுவார்த்தையை நினைவு கூர்ந்துள்ளார்.

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோர். இந்த படம் கிட்ட தட்ட 100 நாட்களை கடந்து ஓடி வெற்றிபெற்றதால்,  அஜித்துக்கு ஜோடியாக ‘வில்லன் ‘, கமலுக்கு ஜோடியாக  ‘அன்பே சிவம்’,  ‘திருமலை’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். சுந்தர் சி இயக்கத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக வின்னர் படத்தில் கிரண் படுகவர்ச்சியாக நடித்தது கோலிவுட்டையே வாய்பிளக்க வைத்தது. 

இதையும் படிங்க: பிகினியில் செம்ம கெத்தாக போஸ் கொடுத்த ஆர்யா மனைவி.... வைரலாகும் சாயிஷாவின் ஹாட் கிளிக்...!

ஆனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எப்படியாவது பட  வாய்ப்புகளை பிடித்து விட வேண்டும் என்பதற்காக அரைகுறை ஆடைகளில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கிரண். முன்னழகு, பின்னழகு என அனைத்தும் அப்பட்டமாக தெரியும் படியாக படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, இளசுகளை சூடேற்றி வருகிறார்.

இதையும் படிங்க: “ட்வீட்டை ஒழுங்கா பாத்தியாடா?”.... ஒருமையில் திட்டிய சூர்யா ரசிகரை தனது பாணியிலேயே டீல் செய்த சரத்குமார்...!

தற்போது வயதானதாலும், உடல் எடை அதிகமாகி கொஞ்சம் குண்டானதாலும்  வாய்ப்பு தேடி வரும் கேரக்டர்கள் அனைத்தையும் ஒப்புக்கொள்கிறார். சகுனி படத்தில் பிரகாஷ் ராஜுக்கு ஜோடியாகவும், ஆம்பள படத்தில் விஷாலுக்கு அத்தையாகவும், முத்தின கத்திரிக்காய் படத்தில் சுந்தர் சிக்கு மாமியாரகவும் நடித்தார். நடிப்பது குணச்சித்திர வேடம் என்றாலும் கவர்ச்சியில் குறைவைக்காமல் நடித்திருந்தார். இந்நிலையில் தனது முதல் பிகினி அனுபவமான வின்னர் படத்திற்காக படக்குழுவினர் தன்னிடம் நடத்திய பேச்சுவார்த்தையை நினைவு கூர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: இஸ்லாத்திற்கு மாறியது ஏன்?... மனைவியை ரவுண்ட் கட்டிய நெட்டிசன்களுக்கு நெத்தியடி பதில் கொடுத்த யுவன்...!

அதாவது, பிகினி அணிந்து நான் நடித்த முதல் மற்றும் கடைசி காட்சி. இந்த படத்திற்காக  பிகினி அணியச் சொல்லி என்னிடம் 6 மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் எனக்குள் பல கேள்விகள் எழுந்தது. காரணம் என் உடை எடையை பற்றி யோசித்தது தான். அந்த பாடலும், படமும் ஹிட்டானது. அந்த காட்சியில் நடித்ததால் என்னுடைய பல ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். எனக்குத் தெரியும்... ஆனால்  சரியான சம்மர் பாடியுடன் மீண்டும் செய்வேன் என்று பதிவிட்டுள்ளார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

4 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் பியூஸ் ஆன பாலய்யாவின் அகண்டா 2 - மொத்த வசூலே இவ்வளவு தானா?
நீலாம்பரி போல் திமிர் காட்டிய சாண்ட்ரா... படையப்பாவாக மாறி பதிலடி கொடுத்த கானா வினோத்..!