ட்ரான்ஸ்பிரண்ட் தாவணியில் கவர்ச்சி போஸ்... இன்ஸ்டாவில் புகுந்து விளையாடும் பிக்பாஸ் ஜூலி...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Jun 1, 2020, 5:36 PM IST

தன்னை புகழ்ந்து தள்ளும் இன்ஸ்டாவாசிகளுக்காகவே ஜூலி ரகரகமாக போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். 


ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விதவிதமாக கோஷம் போட்டு மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. அதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். ஜூலி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது அதை ரசிகர்கள் பெருமையாக பார்த்தார்கள். ஆனால் இடையில் காயத்ரியுடன் சேர்ந்து கொண்டு ஜூலி செய்த சில காரியங்கள் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது. இதனால் தமிழ் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்கொண்டார்.

 

Tap to resize

Latest Videos

undefined

இதையும்  படிங்க: 

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகும் ஜூலியை சோசியல் மீடியாவில் வறுத்தெடுப்பதை நெட்டிசன்கள் கைவிடவில்லை. ஜூலி என்ன செய்தாலும், அதை மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இடையில் பட வாய்ப்புகள், கடை திறப்பு விழா, கல்லூரி நிகழ்ச்சிகள் என பிசியாக வலம் வந்தார்.ட்விட்டரில் படு ஆக்டிவாக வலம் வந்த ஜூலி தனது விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பகிர்ந்து வந்தார். ஆனால் ஜூலி என்ன செய்தாலும் நெட்டிசன்கள் ஓவராக கலாய்த்து வந்தனர்.

இதையும் படிங்க: 

 இந்நிலையில் தான் ஜூலி தனது அழகிய புகைப்படங்களை ட்விட்டருக்கு பதில் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து ஆரம்பித்தார். இன்ஸ்டாவில் இருக்கும் ரசிகர்கள் பலரும் ஜூலியின் அழகிற்கு அடிமை ஆகிவிட்டார்கள் போலும், அவரது போட்டோஸை பார்த்து விதவிதமாக பாராட்ட ஆரம்பித்தனர். இதனால் ஜூலி இன்ஸ்டாவிலேயே நிரந்தரமாக செயல்பட முடிவெடுத்துவிட்டார். மேக்கப் இல்லாமல் ஜூலி மாடர்ன் உடையில் எடுத்திருக்கும் அந்த புகைப்படங்களை பார்த்தவர்கள் கலாய்க்கவில்லை, திட்டவில்லை, மாறாக பாராட்டி வருகின்றனர். 

இதையும் படிங்க: 

தன்னை புகழ்ந்து தள்ளும் இன்ஸ்டாவாசிகளுக்காகவே ஜூலி ரகரகமாக போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அப்படி கறுப்பு நிற ட்ரான்ஸ்பிரண்ட் தாவணி, பாவாடையில் ஜூலி கொடுத்துள்ள அசத்தல் போஸ்கள் லைக்குகளை குவித்து வருகிறது. அளவான மேக்கப், கறுப்பு நிற பாவாடை தாவணிக்கு ஏற்ற மாதிரி செம்ம க்யூட்டான நகைகள் என அழகில் ஜொலிக்கும் ஜூலியின் புகைப்படங்கள் வேற லெவலுக்கு வைரலாகி வருகிறது. ஜூலியின் அந்த லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ... 
 

click me!