
ஜெய்ப்பூரில் கிடந்த 1981ம் ஆண்டு பிறந்த நடிகை தான் கிரண், தற்பொழுது இவருக்கு வயது 43. மாடல் அழகியான இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ஒரு பாலிவுட் திரைப்படத்தின் மூலம் தனது கலை பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு கடந்த 2002ம் ஆண்டு தமிழில் வெளியான பிரபல நடிகர் விக்ரமின் "ஜெமினி" திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
உலக நாயகன் கமல்ஹாசன், மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த், பிரசாந்த், தல அஜித் மற்றும் விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த கிரண், கடந்த 2009ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக இருந்து வந்தார். ஆனால் அதன் பிறகு மெல்ல மெல்ல அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.
80களில் கொடிகட்டி பறந்த பிரபல நடிகைக்கு இப்படி ஒரு நோயா? அவங்களே சொன்ன உருக்கமான தகவல்..
இறுதியாக தமிழில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான "இளமை ஊஞ்சல்" என்கின்ற திரைப்படத்தில் அவர் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு கடந்த எட்டு ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த கிரன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமரான தனது போட்டோக்களை வெளியிட்டு அவ்வப்போது சர்ச்சையிலும் சிக்கி வந்தார்.
தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் தற்பொழுது அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கடந்த மே 13ஆம் தேதி கேன்ஸ் விழாவில் தன்னுடைய திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ள நிலையில் அதற்கு அங்கு செல்ல தயாராக இருந்ததாகவும்.
தற்பொழுது தன்னைத் தவிர அந்த திரைப்பட குழுவினர் அனைவரும் அங்கு இருப்பதாகவும், கேன்ஸ் விழாவில் தன்னுடைய திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது, ஆனால் தன்னால் அதை காண முடியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் கேன்ஸ் விழாவிற்கு செல்வதற்காக பிரான்ஸ் நாட்டில் விசாவை எடுக்க அவர் முயற்சித்துள்ளார்.
தனது பதிவில் ஒரு விசா பணிகளை மேற்கொள்ளும் ஒரு நிறுவனத்தை குறிப்பிட்டு, தன்னுடைய 15 லட்சம் பணம் ஏமாற்றப்பட்டுள்ளது என்றும். இன்னும் தன்னுடைய பாஸ்போர்ட் எங்கு உள்ளது என்று தனக்கு தெரியவில்லை என்றும், இதனால் மிகப்பெரிய மன வேதனையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.