வேலைக்காரியை அடித்து துரத்திய பிரபல நடிகை..! அதிரடி ஆக்சனில் இறங்கிய போலீசார்...! 

 
Published : Jul 05, 2018, 02:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:37 AM IST
வேலைக்காரியை அடித்து துரத்திய பிரபல நடிகை..! அதிரடி ஆக்சனில் இறங்கிய போலீசார்...! 

சுருக்கம்

actress kimsharma attacked labour

பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குடன் காதலில் கிசுகிசுக்கப்பட்டவர் பிரபல பாலிவுட் நடிகை கிம்சர்மா. இவர் நடிகர் ராம்சரண் தேஜாவிற்கு ஜோடியாக 'மகதீரா' படத்திலும் நடித்துள்ளார். 

தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல், மும்பையில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வீட்டில் வேலை செய்து வந்த வேலைக்காரியை அடித்து சித்ரவதை செய்து, வீட்டை விட்டு வெளியேற்றியதாக இவர் மீது, வீட்டில் பணியாற்றிய பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார். 

கிம்சர்மா குற்றச்சாட்டு:

துணிகள் துவைக்கும் போது, வெள்ளை நிற உடை, மற்றும் கலர் உடைகளை தனித்தனியாக பிரித்து துவைக்காததால், 70,000 மதிப்புள்ள உயர்தர உடை இனி போடவே முடியாத அளவிற்கு வீணாகி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். 

அடித்ததாக புகார்:

இந்நிலையில் இது குறித்து மும்பை போலீசில், கிம்சர்மா வீட்டில் பணியாற்றிய எஸ்தர் என்பவர் கொடுத்துள்ள புகாரில்,  'கிம்சர்மா அவரின் உடைமைகளை சரியாக துவைக்காததால் அவருடைய விலை உயர்ந்த உடை வீணாகி விட்டதாக கூறி தன்னை அடித்து வீட்டின் வெளியே தள்ளினார். மேலும் தனக்கு சம்பள பாக்கியம் வைத்துள்ளார் என புகார் கொடுத்துள்ளார்.

வழக்கு பதிவு:

இவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் கிம்சர்மா மீது 323, 504, ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர். 

கிம்சர்மா பதில்:

இந்த புகாருக்கு பதில் கொடுத்துள்ள நடிகை கிம்சர்மா, 'என் வீட்டில் வேலை செய்தவரை நான் அடிக்கவில்லை. துணி துவைத்த போது என்னுடைய 70,000 மதிப்புள்ள உடையை மீண்டும் பயன்படுத்த முடியாத படி அவர் வீணடித்து விட்டார். இதனால் அவரை வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னேன். அவர் நான் அடித்ததாக கூறுவது பொய் என்பது போல் கூறியுள்ளார்.  தொடந்து இந்த வழக்கை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?