நடிகை கீர்த்தி சுரேஷ் பா.ஜ.க.வில் ஐக்கியமாகிறாரா?... மம்மி மேனகா என்ன சொல்கிறார்?...

By Muthurama LingamFirst Published May 10, 2019, 3:23 PM IST
Highlights

தமிழ்,தெலுங்குப்படங்களைத் தாண்டி தற்போது இந்தி நடிகையாகவும் முன்னேறிவிட்ட கீர்த்தி சுரேஷ் மோடி முன்னிலையில் பா.ஜ.க.வில் இணையப்போகிறார் என்ற செய்திக்கு அவரது தாயார் மேனகா பதில் அளித்துள்ளார்.
 

தமிழ்,தெலுங்குப்படங்களைத் தாண்டி தற்போது இந்தி நடிகையாகவும் முன்னேறிவிட்ட கீர்த்தி சுரேஷ் மோடி முன்னிலையில் பா.ஜ.க.வில் இணையப்போகிறார் என்ற செய்திக்கு அவரது தாயார் மேனகா பதில் அளித்துள்ளார்.

’ராமாயி வயசுக்கு வந்துட்டா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி  ரஜினியுடன் ‘நெற்றிக்கண்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா . கீர்த்தி சுரேசின் தந்தை சுரேஷ் மலையாள சினிமா தயாரிப்பாளர். கீர்த்தி சுரேஷின் பாட்டியும் நடித்து வருகிறார். இந்நிலையில் மேனகா சுரேஷ் டெல்லியில் பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு வந்தது பரபரப்பாகி இருக்கிறது.

மேனகா தனது கணவர் வழியில் பாஜகவில் சேர்ந்துவிட்டதாகவும், விரைவில் கீர்த்தி சுரேஷும் காவி நிற காஷ்ட்யூமுக்கு மாறிவிடுவார் என்றும் செய்திகள் சிறகடித்தன. இச்செய்திகளுக்கு இன்று மறுப்புத் தெரிவித்த மேனகா,’‘என் கணவர் சுரேஷ் பா.ஜனதா கட்சியில் இருக்கிறார். ஆனால் நான் இப்போதுவரை எந்த கட்சியிலும் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. கீர்த்தியும் இந்த வி‌ஷயத்தில் என்னை மாதிரிதான்.

கணவர் சார்ந்திருக்கிற கட்சி என்ற முறையில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய டெல்லி சென்று இருந்தேன். பிரசாரம் முடிந்த உடன் சினிமா பிரபலங்கள் சிலர் பிரதமர் மோடியைச் சந்திக்க இருக்கிறார்கள். நீங்களும் கலந்துகொள்ள வேண்டும்’ என்று கேட்டார்கள்.

சுரேஷ் கோபி, கவிதா என்று எனக்கு அறிமுகமான சிலர் இருந்ததால் நானும் கலந்துகொண்டேன். பா.ஜனதா அலுவலகத்திலேயே அந்த சந்திப்பு நடந்தது. குரூப் போட்டோ எடுத்துக் கொண்டோம். அந்த செய்திதான் நடிகை மேனகாவும் பா.ஜனதா கட்சியில் சேர்ந்துவிட்டார்’ என்ற அர்த்தத்தில் வெளியாகி இருக்கிறது. கொஞ்சம் ஓவராக போய் ‘கீர்த்தியும் பா.ஜனதாவுல சேர்ந்துட்டாங்களாமே’ என்றுகூட விசாரித்திருக்கிறார்கள். அது அப்படியே சிறகு முளைத்து தலைப்புச் செய்திகளாகிவிட்டது. எங்கள் குடும்பம் பா.ஜ.க.குடும்பம் தான். ஆனால் நானோ, கீர்த்தியோ கட்சியில் இணையவில்லை’என்கிறார் மேனகா.

click me!