
விஜய் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் 63 ஆவது படத்தில் நடித்து வருகிறார். சென்னையை பூந்தமல்லியில் தற்போது கால் பந்து மைதானத்தின் பிரமாண்ட செட் அமைத்து, பட காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் அடிக்கடி, ஷூட்டிங்கின் போது... எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியாக்கி வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில், விஜய் வீல் சேரில் அமர்ந்துள்ளது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகியது. அதை தொடர்ந்து தற்போது, கால் பந்து அணியின் கேப்டனாக நடித்து வரும் நடிகை சிந்துஜா , ஷூட்டிங் ஸ்பாட்டில் கால் பந்து விளையாட்டு செட்டில் சிவப்பு நிற உடையில் எடுத்து கொண்டுள்ள புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்திற்காக சிந்துஜா தன்னுடைய முடியையும் வெட்டி கொண்டு நடித்துள்ளார் என்பது இந்த புகைப்படம் மூலம் தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.