Kavitha Vijayakumar : பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமனா கவிதா விஜயகுமார் தனது குடும்பத்தினருடன் இணைந்து இந்த பொங்கலை ஆனந்தமாக கொண்டாடியுள்ளார்.
பிரபல மற்றும் மூத்த தமிழ் சினிமா நடிகர் விஜயகுமாருக்கு 2 மனைவிகள் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். அவர் கடந்த 1969-ம் ஆண்டு முத்துக்கண்ணு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார் மற்றும் முத்துக்கண்ணு தம்பதிக்கு பிறந்த குழந்தைகள் தான் டாக்டர் கவிதா விஜயகுமார், நடிகை அனிதா விஜயகுமார் மற்றும் நடிகர் அருண் விஜய்.
அதே போல நடிகர் விஜயகுமார் தனது சமகாலத்து நடிகையான மஞ்சுளாவை கடந்த 1976-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதிக்கு பிறந்த குழந்தைகள் தான் நடிகைகள் வனிதா விஜயகுமார், ப்ரீத்தா விஜயகுமார் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர். இவர்கள் மூவரும் சில நல்ல தமிழ் படங்களில் நடித்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்தது தான்.
விஜயகுமாரின் மூத்த மகளான கவிதா விஜயகுமார், சர்தகுமாரின் கூலி படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்திருப்பார். அதை தொடர்ந்து அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்த நிலையில், அதை மறுத்த கவிதா திருமணம் செய்து கொண்டு தனது கணவரோடு செட்டிலாகி விட்டார். இவர்களுடைய அக்கா அனிதா விஜயகுமார் நடிப்புலகம் பக்கம் வராமல் மருத்துவராகி வெளிநாட்டுக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார்.
இந்நிலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு டாக்டர் அனிதா விஜயகுமார் துபாயில் இருந்து சென்னை வந்த நிலையில், அவரது தங்கையான கவிதா விஜயகுமார் அவர்களும் தனது குடும்பத்துடன் இணைந்து பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடியுள்ளார். அந்த வீடியோ இப்பொது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.