"வெறும் வணிக நோக்கத்தோடு எடுத்த படமல்ல".. அன்னப்பூரணி பட விவகாரம் - வருத்தம் தெரிவித்த நடிகை நயன்தாரா!

By Ansgar R  |  First Published Jan 18, 2024, 11:39 PM IST

Nayanthara About Annapoorani Issue : பிரபல நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் அன்னப்பூரணி.


இந்நிலையில் இந்த படத்தில் வரும் சில வசனங்கள் ஹிந்து மதத்தை அவமதிப்பதாக உள்ளது என்று சில ஆர்வலர்கள் படத்தின் மீதும், நடிகை நயன்தாரா மீதும் புகார் அளித்தனர். இதனையடுத்து Netflix தளத்தில் வெளியான அன்னப்பூரணி படமும் அதிலிருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் இது மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்த நிலையில், நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

எனது நடிப்பில் வெளியான 'அன்னபூரணி' திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

Tap to resize

Latest Videos

மோகன் லால் சும்மா மிரட்டிருக்காரு.. அதிரடி ஆக்ஷனுக்கு பஞ்சம் இல்லாத "மலைக்கோட்டை வாலிபன் - ட்ரைலர் இதோ!

'அன்னபூரணி' திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே 'அன்னபூரணி' திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம்.

அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம்.

தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் OTTயில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை.

கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன்.

அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல. எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும், மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அன்புடன், நயன்தாரா

அட நம்ம தாஜ் மஹால் பட ஹீரோயினா இது? 42 வயதிலும் துள்ளும் இளமை - நடிகை ரியா சென்னின் ஹாட் பிக்ஸ் இதோ!

click me!