மோகன் லால் சும்மா மிரட்டிருக்காரு.. அதிரடி ஆக்ஷனுக்கு பஞ்சம் இல்லாத "மலைக்கோட்டை வாலிபன் - ட்ரைலர் இதோ!

By Ansgar R  |  First Published Jan 18, 2024, 9:39 PM IST

Malaikkottai Valiban Trailer : பிரபல மலையாள நடிகர் மோகன் லால் நடிப்பில் வருகின்ற ஜனவரி 25ம் தேதி வெளியாகவுள்ள படம் தான் மலைக்கோட்டை வாலிபன். 


மலையாள சினிமாவில் இன்று மாபெரும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்துவரும் மோகன்லால் கடந்த 1978 ஆம் ஆண்டு உருவாகிய "திறனோட்டம்" என்கின்ற திரைப்படத்தில் நடித்து அதன் மூலம் மலையாள திரை உலகில் அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படம் இறுதிவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் கடந்த 1980 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான "மஞ்சள் விரிஞ்சு பூக்கள்" என்ற திரைப்படத்தின் மூலம் அவர் திரையுலகில் அறிமுகமானார். 

கடந்த 43 ஆண்டுகளாக அவர் இந்திய சினிமா உலகில் மிகப்பெரிய நடிகராக வளம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் மோகன்லால் முதல் முறையாக கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான "கோபுர வாசலிலே" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். 

Tap to resize

Latest Videos

”நான் இதுக்காக தான் வெயிட் பண்றேன்..” கணவருடன் கோவாவில் Chill பண்ணும் அமலாபால்.. வைரல் வீடியோ..

ஆனால் அந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் அவர் ஏற்று நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களை மலையாளத்தில் நடித்த பிறகு, கடந்த 1997 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான "இருவர்" என்கின்ற திரைப்படம் தான் அதிகாரப்பூர்வமாக கதையின் நாயகனாக மோகன்லால் நடித்து தமிழில் வெளியான முதல் திரைப்படம்.

பல்வேறு தேசிய விருதுகளை வென்றுள்ள மோகன்லால், தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 350க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த மோகன்லால் இறுதியாக தமிழில் வெளியான நெல்சன் திலீப் குமாரின் "ஜெயிலர்" திரைப்படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நண்பராக  நடித்திருந்தார். 

வருகின்ற 2026 ஆம் ஆண்டு வரை இவருடைய திரைப்பட பட்டியல் நீண்டு கொண்டே வருகிறது, இந்நிலையில் வருகின்ற ஜனவரி மாதம் 25ஆம் தேதி உலக அளவில் வெளியாக உள்ள இவருடைய "மலைக்கோட்டை வாலிபன்" திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் தற்பொழுது வெளியாகி உள்ளது. பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் கேரளாவில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Top 10 TRP: சும்மா தடாலடியா இருக்கே.. சன் டிவி சீரியலை அடித்து நொறுக்கி TRP-யில் கெத்து காட்டிய சிறகடிக்க ஆசை!

click me!