கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் ஆன பாடகி கனிகா கபூர்!

By manimegalai aFirst Published Apr 6, 2020, 4:55 PM IST
Highlights

பல பாலிவூட் திரைப்படங்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பாடி தன்னுடைய இனிமையான குரலால், ரசிகர்களை கவர்ந்தவர், பாடகி கனிகா கபூர். இவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது இவருடைய ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.
 

பாடகி கனிகா கபூர்:

பல பாலிவூட் திரைப்படங்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பாடி தன்னுடைய இனிமையான குரலால், ரசிகர்களை கவர்ந்தவர், பாடகி கனிகா கபூர். இவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது இவருடைய ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.

கொரோனா தொற்று:

கனிகா கபூர், கடந்த மாதம் லண்டன் சென்று திரும்பிய போது இவருக்கு யாரோ ஒருவர் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக இந்த பாதிப்பு வெளிப்படவில்லை என்றாலும், சில நாட்கள் கழித்து இவருக்கு காச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து, டெஸ்ட் செய்து பார்த்தபோது கொரோனா இருப்பது உறுதியானது.

மேலும் செய்திகள்: ஏ.ஆர்.ரகுமானுக்கு முதல் முதலில் வாய்ப்பு கொடுத்த பிரபல இசையமைப்பாளர் காலமானார்!
 

அமைச்சர்களுடன் பார்ட்டி:

லண்டனில் இருந்து திரும்பி வந்த கையேடு கனிகாகபூர், மத்திய அமைச்சர் உள்பட 56 பேர் கலந்து கொண்ட ஒரு பிரமாண்ட விருந்தில் கலந்து கொண்டார். பின்னர் கனிகா கபூருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த விருந்தில் கலந்து கொண்ட,  56 நபர்களும், தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார துறையை சேர்ந்தவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக செய்திகள் வெளியானது.

மூடப்பட்ட நட்சத்திர ஹோட்டல்:

மேலும் கனிகா கபூர் கலந்து கொண்ட, பிரபல நட்சத்திர ஹோட்டல், அதிரடியாக மூடப்பட்டு... அங்கு பணியில் இருந்த அனைவர்க்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்: மது அருந்தியதால் ஏற்பட்ட விபத்தா? மௌனம் களைத்த நடிகை ஷர்மிளா மந்திரே!
 

கொரோனாவில் இருந்து மீண்டு வரும் கனிகா:

தற்போது லக்னோவில் உள்ள சஞ்சய்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கனிகா கபூருக்கு, நான்கு முறை கொரோனா டெஸ்ட் எடுத்ததில் பாசிட்டிவ் என வந்தது. இதையடுத்து ஐந்தாவது முறையாக எடுக்கப்பட்டதில் மட்டுமே நெகடிவ் என வந்துள்ளதாக கூறப்படுகிறது.

என்னினும், மீண்டும் ஒரு கொரோனா டெஸ்ட் எடுத்து அதில் அவருக்கு நெகடிவ் என வந்தால் மட்டுமே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை தரப்பி இருந்து தெரிவிக்கப்பட்டது. இது குறித்து சமீபத்தில் கனிகா கபூரும் உருக்கமாக ட்விட் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்: பட வாய்ப்பு வந்ததும்... புது மாப்பிளையை டீலில் விட்டாரா லட்சுமி மேனன்? சோள முத்தா போச்சா...
 

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பாடகி:

இந்நிலையில், இவருக்கு 6 வது முறையாக செய்யப்பட்ட கோரோனோ டெஸ்டில், நெகடிவ் என ரிசல்ட் வரவே... தற்போது கனிகா கபூர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவல் இவர்களுடைய ரசிகர்களை நிம்மதி அடையவைத்துள்ளது.


 

click me!