சர்ச், மசூதிகளெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா?.. கோயில் மட்டும் தான் தெரியுதா? ஜோதிகாவை விளாசும் நெட்டிசன்கள்

By Kanimozhi PannerselvamFirst Published Apr 22, 2020, 6:19 PM IST
Highlights

அந்த விருது விழாவில் கோவில்கள் பற்றி ஜோதிகா பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜோதிகா சமீபத்தில் நடித்த ராட்சசி திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் புகழ் பெற்றது. இந்நிலையில் அந்த படத்தில் நடித்ததற்காக ஜோதிகாவிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த விருது விழாவில் கோவில்கள் பற்றி ஜோதிகா பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

அந்த நிகழ்ச்சியில், பிரகதீஸ்வரர் ஆலயம் இங்க பிரபலமானது, அழகாக இருக்கும் கண்டிப்பாக நீங்க பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏற்கனவே அதை பார்த்திருக்கேன். உதய்பூர் அரண்மனை மாதிரி நன்றாக பராமரித்து வருகிறார்கள். அடுத்தநாள் என் ஷூட்டிங்கிற்கு போற வழியில் மருத்துவமனை ஒன்றை பார்த்தேன். அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் பார்த்தவற்றை என் வாயால் சொல்ல முடியாது. 

இதையும் படிங்க: “நாயகி” சீரியல் நடிகை வித்யாவா இது?... குட்டை டவுசரில் கவர்ச்சி தூக்கலாக கொடுத்த ஹாட் போஸ்...!

எல்லாருக்கும் கோரிக்கை, ராட்சசியில் கூட இயக்குநர் கெளதம் சொல்லியிருக்காரு கோவிலுக்காக அவ்வளவு காசு கொடுக்குறீங்க. அவ்வளவு பராமரிக்கிறீங்க. கோவில் உண்டியலில் காசு போடுறீங்க, தயவு செய்து அதே தொகையை  பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. நான் அந்த கோவிலுக்குள் போகவில்லை. அந்த மருத்துவமனையைப் பார்த்த பிறகு போகவில்லை. மருத்துவமனைகளும், பள்ளிகளும் அந்த அளவுக்கு முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம் என்று பேசியிருந்தார். 

இதையும் படிங்க: நயன்தாரா என்ன யோக்கியமா..? வாண்டடாக வம்பிழுக்கும் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி...!

ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு கருத்து தெரிவித்துள்ள எஸ்.வி.சேகர், ஜோதிகாவின் பேச்சு 100 சதவீதம் முதிர்ச்சியற்றது. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.ஆலயம் தொழுவது (உங்களுக்கு பிடிக்குமே) சாலவும் நன்று. இதெல்லாம் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க.  சுத்தமான ஹாஸ்பிடல் நல்ல பள்ளிகள் அவசியம். கோயிலுக்கு பதில் இதச்செய்யுனு சொல்லுவது அயோக்கியத்தனம்.உங்கள் மாமனாரிடம் கேளுங்கள் என்று கொந்தளித்துள்ளார். 

Jothika 100% immatured speech.கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா. ஆலயம் தொழுவது (உங்களுக்கு பிடிக்குமே) சாலவும் நன்று. இதெல்லாம் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க. சுத்தமான ஹாஸ்பிடல் நல்ல பள்ளிகள் அவசியம். கோயிலுக்கு பதில் இதச்செய்யுனு சொல்லுவது அயோக்கியத்தனம்.Ask Ur FATHER IN LAW https://t.co/h5aoIF26yI

— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER)
click me!