சூர்யாவின் டோடல் குடும்பத்துக்கு இவங்கதான் செல்லம்.. Kobeக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்ன ஜோ - Cute Video!

By Ansgar R  |  First Published Feb 4, 2024, 5:37 PM IST

Actress Jyothika : பிரபல நடிகை ஜோதிகா தங்கள் வீட்டில் வளர்ந்து வரும் செல்லப்பிராணியான Kobe என்ற நாய் குட்டியின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டுள்ளார்.


தமிழில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான தல அஜித் அவர்களுடைய "வாலி" திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்ற நடித்து அதன் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான நடிகை தான் ஜோதிகா. அதன் பிறகு அவருடைய முதல் திரைப்படத்தில் அவருக்கு நாயகனாக நடித்தது அவருடைய கணவர் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது. 

"பூவெல்லாம் கேட்டுப்பார்" திரைப்படம் மூலம் ஒன்றிணைந்த சூர்யாவும் ஜோதிகாவும் அந்த காலம் முதலே காதலிக்க ஆரம்பித்தனர். சுமார் ஏழு ஆண்டுகால காத்திருப்பதற்குப் பிறகு கடந்த 2006 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Tap to resize

Latest Videos

இளமை திரும்புதே.. மீண்டும் ரஜினியை யங் லுக்கிற்கு கொண்டுவரும் லோகேஷ்! தலைவர் 171-ல் செம்ம சர்ப்ரைஸ் வெயிட்டிங்

தற்பொழுது பெரிய ஆளாகவே திரைப்படங்களில் ஜோதிகா நடிப்பதில்லை என்றாலும் நேர்த்தியான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தனது குடும்பத்தோடு அதிக நேரம் செலவிட்டு வரும் ஜோதிகா தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அழகிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jyotika (@jyotika)

தங்கள் வீட்டில் ஓராண்டுக்கு முன்பு அவர்கள் வளர்க்கத் துவங்கிய செல்லப் பிராணியான KOBE என்கின்ற நாய்க்குட்டியின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். சூர்யா, ஜோதிகா மற்றும் அவர்களுடைய இரண்டு குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள அனைவரோடும் நெருங்கி பழகும் அந்த நாய்க்குட்டி அந்த வீட்டின் செல்லப் பிராணியாக வளர்ந்து வருகின்றது.

அட நம்ம சென்னை 28 செல்வியா இது? அழகு ராணியாக மாறி அசத்தல் போஸ் கொடுத்த விஜயலக்ஷ்மி - லேட்டஸ்ட் பிக்ஸ் இதோ!

click me!