மாறுபட்ட கதைக்களத்தில் மம்மூட்டியின் பிரமயுகம்.. தியேட்டர் வரும் ரசிகர்களுக்கு ஒரு Surprise - வெளியான அப்டேட்!

Ansgar R |  
Published : Feb 04, 2024, 03:15 PM IST
மாறுபட்ட கதைக்களத்தில் மம்மூட்டியின் பிரமயுகம்.. தியேட்டர் வரும் ரசிகர்களுக்கு ஒரு Surprise - வெளியான அப்டேட்!

சுருக்கம்

Mammootty Bramayugam : பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி அவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் பிரமயுகம். இந்த பிப்ரவரி மாதம் அப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கடந்த 1971 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளிவந்த ஒரு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் களம் இறங்கிய நடிகர் தான் மம்மூட்டி அவர்கள். அன்று தொடங்கி இன்று வரை 50 ஆண்டுகளையும் கடந்து மலையாள திரை உலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகமே வியக்கும் முன்னணி நடிகராக பயணித்து வருகிறார். கடந்த 1983 ஆம் ஆண்டு ஒரே வருடத்தில் இவருடைய நடிப்பில் 33 திரைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

அவர் திரையுலகில் அறிமுகமான வெகு சில ஆண்டுகளிலேயே மிகப்பெரிய நடிகராக உருவெடுத்த மம்மூட்டி அவர்கள், கடந்த 1990 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "மௌனம் சம்மதம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். தமிழ் மற்றும் மலையாளம் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சிறந்த நடிகராக விளங்கி வருகிறார். 

மஞ்சு வாரியர் முதல் பிரசாந்த் வரை.. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பட வாய்ப்பை மிஸ் பண்ணிய நடிகர்கள் இத்தனை பேரா?

தனது 50 ஆண்டுகால திரை பயணத்தில் மம்மூட்டி 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் நடிப்பில் இறுதியாக வெளியான "காதல் தி கோர்" திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படத்தில் அவருடைய நாயகியாக பிரபல நடிகை ஜோதிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு ஓரின சேர்க்கையாளரின் கதாபாத்திரத்தை அவர் ஏற்று நடித்திருந்தது அப்படத்தை பார்த்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. 

இந்நிலையில் முற்றிலும் மாறுபட்ட ஒரு வேடத்தில் மம்மூட்டி நடித்து வெளியாகவுள்ள படம் தான் பிரமயுகம். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது. வருகின்ற பிப்ரவரி 15ம் தேதி இந்த படம் திரையில் வெளியாகவுள்ள நிலையில், தியேட்டர் வரும் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சர்யம் அளிக்கும் விதமாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது பிரமயுகம் திரைப்படம் முழுக்க முழுக்க Black and White படமாக மட்டுமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நாயகன் மாமூட்டி அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தின் வழியாக உறுதிப்படுத்தியுள்ளார்.

'தளபதி வாழ்க' 'தளபதி வாழ்க'... வாக்கு சேகரித்து ராமநாதபுரத்தை அதிரவிட்ட தமிழக வெற்றி கழகத்தினர்...!!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்