
நடிகர் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ளதால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இருப்பினும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்பதை உறுதியாக அறிவித்துள்ள விஜய், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தான் தனது டார்கெட் என திட்டவட்டமாக கூறி உள்ளார்.
மேலும் அரசியலில் முழுமையாக ஈடுபட உள்ளதால் இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் விஜய் அறிவித்திருக்கிறார். தற்போது நடித்து வரும் கோட் படத்தை தொடர்ந்து தனது 69-வ்து படம் தான் தன்னுடைய கடைசி படமாக இருக்கும் என்றும் விஜய் கூறி இருக்கிறார். இது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படியுங்கள்... புனிதராக மாறிய விஜய்? பிப்ரவரி 2 தேதிக்கு பின்னால் உள்ள ரகசியம்! பெயரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட ஜோசப்!
இது ஒருபுறம் இருக்க, நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சி பதிவு செய்ததை முன்னிட்டு ராமநாதபுரத்தில் கேனிக்கரை, வண்டிக்காரத்தெரு, அரண்மனை பகுதி மற்றும் கடைவீதியில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும், விஜய் ரசிகர்களும் ஒன்று கூடி பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதுமட்டுமின்றி, கடைவீதிகளில் வீட்டுக்கு பொருட்கள் வாங்க வந்த கிராமப்புரங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் முதியவர்களிடம் இனிமேல் விஜய்க்கு தான் வாக்களிக்க வேண்டும் என கூறி இப்போதையிலிருந்து வாக்கு சேகரிக்க தொடங்கி விட்டனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... "ஜோசப் விஜய்.. களத்தில் சந்திப்போம்".. தளபதியின் அரசியல் வருகை - வாழ்த்து சொன்ன பிரபலத்தின் ட்வீட் வைரல்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.