கொரோனா கொடுத்த பொன்னான நேரம்.... ஊரடங்கின் போது மகள்களுடன் சேர்ந்து நடிகை தேவயானி என்ன செய்கிறார் தெரியுமா?

Published : Mar 30, 2020, 05:09 PM IST
கொரோனா கொடுத்த பொன்னான நேரம்.... ஊரடங்கின் போது மகள்களுடன் சேர்ந்து நடிகை தேவயானி என்ன செய்கிறார் தெரியுமா?

சுருக்கம்

அப்படி தான் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானியும் தனது மகள்களுடன் உபயோகமாக நேரத்தை செலவிட்டு வருகிறார்.

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன. இந்தியாவில் நேற்று வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எண்ணிக்கை 1071 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆகவும் அதிகரித்துள்ளது. 

இந்த கொடூர வைரஸிடம் இருந்து இந்திய மக்களை காக்கும் பொருட்டு பாரத பிரதமர் மோடி அவர்கள் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். மத்திய, மாநில அரசுகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் புயல் வேகத்தில் இறங்கியுள்ளன. தற்போது வீட்டிற்குள் இருக்கும் மக்கள் அனைவரும் இப்போது கிடைத்துள்ள நேரத்தை பயனுள்ள விதத்தில் எப்படி செலவிடலாம் என்று திரைத்துறை பிரபலங்கள் பலரும் ஆலோசனை கூறி வருகின்றனர். 

இதையும் படிங்க: உலகமே கொரோனா பீதியில்... வெட்கமே இல்லாமல் வடகொரியா செய்த காரியம்...!

சில பிரபலங்களோ தாங்கள் வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை சோசியல் மீடியாவில் வீடியோக்கள் மூலம் வெளிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்து வருகின்றனர். அப்படி தான் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானியும் தனது மகள்களுடன் உபயோகமாக நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: எடுப்பான முன்னழகை காட்டி... இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் யாஷிகா ஆனந்த்... வைரல் போட்டோ...!

இயக்குநர் ராஜகுமாரன், தேவயானி தம்பதிக்கு இனியா, பிரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது ஊரடங்கு காரணமாக தேவயானி குடும்பத்துடன் அந்தியூர் அருகேயுள்ள ராஜகுமாரனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் தங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: சிம்புவுடன் ஓவர் நெருக்கமாக இருக்கும் ஹன்சிகா... வைரலாகும் "மஹா" போட்டோவால் குஷியான ரசிகர்கள்...!

இந்த சமயத்தில் வீட்டில் விட்டு வெளியே வராமல் இருக்கவும், கிடைத்த நேரத்தை பயனுள்ளதாக மாற்றவும் முடிவெடுத்த தேவயானி தனது இரு மகள்களுடன் சேர்ந்து சிலம்பம் கற்று வருகிறார். அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!