ஒளிந்து கிடந்த திறமையை சுவற்றில் வெளிக்காட்டிய நடிகை மகிமா நம்பியார்..! வைரலாகும் வீடியோ!

Published : Mar 30, 2020, 04:02 PM IST
ஒளிந்து கிடந்த திறமையை சுவற்றில் வெளிக்காட்டிய நடிகை மகிமா நம்பியார்..! வைரலாகும் வீடியோ!

சுருக்கம்

'சாட்டை' படத்தின் மூலம் பள்ளி மாணவியாக அறிமுகமானவர் நடிகை மகிமா நம்பியார். இந்த படத்தை தொடர்ந்து,' குற்றம் 23', 'புரியாத புதிர்', 'மகாமுனி', உள்ளிட்ட பல படங்களில் நடித்து திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகள் லிஸ்டில் இடம்பிடித்தார்.  

'சாட்டை' படத்தின் மூலம் பள்ளி மாணவியாக அறிமுகமானவர் நடிகை மகிமா நம்பியார். இந்த படத்தை தொடர்ந்து,' குற்றம் 23', 'புரியாத புதிர்', 'மகாமுனி', உள்ளிட்ட பல படங்களில் நடித்து திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகள் லிஸ்டில் இடம்பிடித்தார்.

மேலும் தற்போது, 'ஐங்கரன்', 'அசுரகுரு', 'கிட்னா' உள்பட ஒரு சில படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 

இந்தியாவில் தற்போது 144 தடை கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருவதால், பிரபலங்கள் யாரும் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே உள்ளனர். கிடைத்த இந்த ஓய்வு நேரத்தில் தங்களுக்கு பிடித்த வேலைகளை செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: கொரோனாவால் உயிரிழந்த பிரபல காமெடி நடிகர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அந்த வகையில் நடிகை மகிமா நம்பியார், தனக்குள் ஒளித்து வைத்திருந்த, ஓவிய திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சுவற்றில் இவர் ஒரு பெண்ணின் அழகிய ஓவியத்தை தீட்டும் வீடியோவை வெளியிட்டு,  இந்த நேரத்தில் எனக்குள் இருந்த பிக்காஸோ வெளியே வந்துள்ளார் என்றும்,  நீங்களும் ஓவியராக மாற உங்களுக்கு தேவை ஒரு சுவர், ஒரு பென்சில் மற்றும் பாராட்ட ஒரு அம்மா’ என்றும் கூறியுள்ளார். 

அதே நேரத்தில், மகிமா நம்பியாரின் ஓவியத்தை பார்த்து, நெட்டிசன்கள் வாவ் என கூறி தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ...

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?