நடிகை பானுபிரியாவின் கணவர் மரணம்...!

 
Published : Feb 01, 2018, 01:17 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
நடிகை பானுபிரியாவின் கணவர் மரணம்...!

சுருக்கம்

actress banupriya husband death in america

நடிகை பானுபிரியா கடந்த 1998 ஆம் ஆண்டு ஆதர்ஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சந்தோஷமாக கணவருடன் வாழ்ந்த இவர்களுக்குள் ஒரு சில கருத்து வேறுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக பானுபிரியா 2005 ஆம் ஆண்டு கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்று கைக்குழந்தையுடன் சென்னைக்கே திரும்பினார்.

ஆதர்ஷ் குடும்பத்துடன் அமெரிக்காவிலேயே வசித்து வந்தார். இந்நிலையில், ஆதர்ஷ் கடந்த 20 ஆம் தேதி அமெரிக்காவில் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.

நடிகை பானுபிரியா:

அழகிய கண்களால் கோலிவுட் ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்டவர் நடிகை பானுபிரியா. 80களில் ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர். 

திருமணம்:

நல்ல மார்க்கெட் இருக்கும் போதே... ஆதர்ஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் நடிகை பானுபிரியா. திருமணத்திற்கு பின் கணவருடன் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடியேறினார்.

விவாகரத்து:

1998 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்ட இவர் 2005 ஆம் ஆண்டு கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்று, இவரின் பெண் அபிநயாவுடன் மீண்டும் சென்னைக்கே வந்து பெற்றோருடன் வழந்து வருகிறார்.

கணவர் மரணம்:

இந்நிலையில் பானுபிரியாவின் கணவர் ஆதர்ஷ் கடந்த 20ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்து விட்டதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!