
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலா பால், அழகேசன் என்கிற தொழிலதிபர் அத்து மீறி நடன பயிற்சி பெரும் இடத்திற்கு வந்து தன்னிடம் பேசுவது போல் ஆரம்பித்து பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுத்தார் என மாம்பலம் காவல் நிலையத்தில் அமலா பால் புகார் கொடுத்துள்ளார்.
அமலா பால்:
'சிந்து சமவெளி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகை அமலா பால் அறிமுகமாகி இருந்தாலும் அவரை நடிகையாக அனைவருக்கும் அறிமுகப்படுத்தியது 'மைனா' திரைப்படம் தான். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமானார்.
திருமணம்:
இவர் முன்னணி நடிகையாக இருக்கும் போதே, பிரபல இயக்குனர் எ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 'தெய்வதிருமகள்' படப்பிடிப்பின் போது இவர்கள் காதல் மலர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விவாகரத்து:
திருமணதித்ற்கு பின் 'அம்மா கணக்கு' என்கிற படத்தில் கணவரின் அனுமதியோடு நடித்தார். அந்த படம் வெற்றியடையவே இவருக்கு பல படங்களில் நடிக்க தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் கணவர் மற்றும் குடும்பத்தினர் இவர் தொடர்ந்து நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது இதனால் கணவரிடம் இருந்து இவர் விவாகரத்து பெற்றதாகவும் கூறப்பட்டது.
நடிக்க துவங்கிய அமலா:
கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்ற பின் தன்னுடைய முழு கவனத்தையும் படங்கள் நடிப்பதில் செலுத்தி வருகிறார் அமலா. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த 'வேலையில்லா பட்டதாரி 2' மற்றும் 'திருட்டு பயலே2' ஆகிய படங்கள் வெற்றி பெற்றது. மேலும் விரைவில் இவர் அரவிந்த் சாமியுடன் நடித்துள்ள 'பாஸ்கர் தி ராஸ்கல்' திரைப்படம் வெளியாக உள்ளது.
பாலியல் தொல்லை:
இந்நிலையில் இன்று நடன பயிற்சிக்காக நடிகை அமலா பால் சென்ற போது, அவரை பின் தொடர்ந்து உள்ளே வந்த தொழிலதிபர் அழகேசன் என்பவர், நடன பயிற்சி பெருபவர் போல் மிகவும் சகஜமாக பேசி அமலா பாலிடம் பாலியல் தொந்தரவு செய்ய முற்பட்டதாக அமலா பால் தற்போது மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அழகேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.