பிரபல இயக்குனரை மணக்கும் பார்த்திபன் மகள் கீர்த்தனா..! யார் தெரியுமா..?

 
Published : Feb 01, 2018, 09:27 AM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
பிரபல இயக்குனரை மணக்கும் பார்த்திபன் மகள் கீர்த்தனா..! யார் தெரியுமா..?

சுருக்கம்

keerthana married famous director

தமிழ் சினிமாவில் எப்படி தனக்கு பிடித்த நடிகர் நடிகைகளை ரசிகர்கள் கொண்டாடுகின்றனரோ அதே போல தனக்கு பிடித்த நடிகரின் மகள் அல்லது மகனுக்கு ஏதேனும் நல்லது நடக்கப்போகிறது என்றால் அதையும் தங்களுடைய வீட்டு விசேஷம் என எண்ணி அவர்களை வாழ்த்துவர். இது காலம் காலமாக தமிழர்களின் ரத்தத்தில் ஊறிய மரபு என்று கூட சொல்லலாம்.

அந்த வகையில் தன்னுடைய, எடக்கு மடக்கான காமெடி பேச்சால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் வரும் திரைப்படங்கள் கூட ஒரே மாதிரியாக இருக்காமல் சற்று வித்தியாசமாகவே இருக்கும் என்பதால் இவருடைய படைப்புக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன், தன்னுடைய இரண்டாவது மகள் கீர்த்தனாவிற்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்துவருகிறார் என்கிற தகவல் ஏற்கனவே வெளியானது. ஆனால் கீர்த்தனா திருமணம் செய்துக்கொள்ள போகும் மணமகன் குறித்து எந்த ஒரு தகவலும் இது வரை வெளியாகாமல் இருந்து.

தற்போது இவர் திருமணம் செய்துக்கொள்ளும் மணமகன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஒரு பிரபலத்தின் மகன் மற்றும் இயக்குனர் . எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் மகன் அக்ஷய் அக்கினேனியை தான் கீர்த்தனா திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம்.

அக்ஷய் தமிழ் வெளியாகி சூப்பர் ஹிட் படமான இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா படத்தை  ஹிந்தியில் ரீமேக் செய்து இயக்கியிருந்தார். மேலும் இவருடைய தந்தை தான் விஜய்யின் 62வது படத்திற்கு  எடிட்டர்.

அக்ஷய் மற்றும்  கீர்த்தனாவின் திருமணம் வரும் மார்ச் 8ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2 வசூல் வேட்டை: 10 நாட்களில் இத்தனை கோடியா? பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கும் பாலகிருஷ்ணா!
தமிழ் பிக்பாஸ் 9ல் சிறந்த டாப் 5 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? டாப்பில் பாருவா?