
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா தம்பதிக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதை ரகசியமாக வைத்திருந்தனர். அதன் பின்னர் தனது மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக விராட் கோலி பதிவிட்ட ட்வீட் 2020ம் ஆண்டில் அதிகம் லைக் செய்யப்பட்ட ட்வீட் என்ற சாதனையை படைக்கும் அளவிற்கு அனைவரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
விரைவில் அம்மாவாக உள்ள அனுஷ்கா சர்மா உலகின் மிகவும் பிரபலமான மேகஸினான வோக் பத்திரிக்கைக்கு தனது நிறைமாத வயிறுடன் செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்த போட்டோ ஷூட் ஒன்று சமீபத்தில் வெளியாகி உலக அளவில் கவனம் ஈர்த்தது. அனுஷ்கா சர்மாவிற்கான பிரசவ தேதியை மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், அதையெல்லாம் அவர் பொருட்படுத்தாமல் அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
நிறைமாத வயிறுடன் ட்ரெட்மில்லில் நடைப்பயிற்சி செய்யும் அனுஷ்கா சர்மாவின் வீடியோ தான் அது. உடற்பயிற்சி உடையுடன் துளியும் சோர்வின்றி பயிற்சி மேற்கொள்ளும் அனுஷ்காவின் வீடியோ இதோ...
"
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.