“S12 புதுப்பேட்டை 2 இல்லை”... தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் நீடிக்கும் குழப்பம்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jan 06, 2021, 07:34 PM IST
“S12 புதுப்பேட்டை 2 இல்லை”... தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் நீடிக்கும் குழப்பம்...!

சுருக்கம்

சமீபத்தில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தனுஷ் படத்திற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டது போன்ற புகைப்படம் ஒன்றை செல்வராகவன் ஷேர் செய்திருந்தார்.

தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் வெளியான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக சூப்பர் ஹிட் அடைந்தது. அதுமட்டுமின்றி புதுப்பேட்டை, காதல் கொண்டேன் படங்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக உள்ளது. அதேபோல் இவர்களது வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம் யுவன் ஷங்கர் ராஜாவின் மேஜிக் இசை. சமீபத்தில் 8வது முறையாக யுவன் சங்கர் ராஜாவுடன் இணைய உள்ளதாக செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். 

இதையடுத்து இவர்கள் 3 பேரும் ஒன்றிணைகிறார்கள் என்றால் அது நிச்சயம் புதுப்பேட்டை 2 படமாக தான் இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இதனிடையே செல்வராகவனின் 12வது படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பது உறுதியானது. இதனிடையே சமீபத்தில் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இதில் சோழ இளவரசனாக தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமின்றி வித்தியாசமாக ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர்களும் சோசியல் மீடியாவில் வைரலானது. 


சமீபத்தில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தனுஷ் படத்திற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டது போன்ற புகைப்படம் ஒன்றை செல்வராகவன் ஷேர் செய்திருந்தார்.அதற்கு S12 அதாவது செல்வராகவனின் 12 வது படம் என்ற கேப்ஷனையும் கொடுத்திருந்தார். உடனே ரசிகர்கள் பலரும் புதுப்பேட்டை 2 படத்தின் வேலையில் செல்வராகவன் இறங்கிவிட்டதாக கூறிவந்தனர். ஆனால் அதுகுறித்த உண்மை தற்போது வெளியாகியுள்ளது. 

 

இதையும் படிங்க: முட்டி வரையுள்ள குட்டை உடையில் அனிகா கொடுத்த அதிர்ச்சி போஸ்கள்... கூடும் கிளாமரால் குழப்பத்தில் ரசிகர்கள்!

செல்வராகவன் வெளியிட்ட அந்த புகைப்படம் புதுப்பேட்டை 2 படத்தின் வேலைக்கானது கிடையாதாம். தனுஷுக்கு அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகியுள்ளதால், அடுத்த ஆண்டு தான் புதுப்பேட்டை 2 படத்திற்கான ஷூட்டிங்கையே செல்வராகவன் திட்டமிட உள்ளாராம். ஆனால் தனுஷ் ரசிகர்களை குஷியாக்குவதற்காக பொங்கல் பண்டிகை அன்று புதுப்பேட்டை 2 டீசர் ஒன்றை வெளியிட செல்வராகவனும், தனுஷும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. a

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!