
தமிழ் சினிமாவில் 'கற்றது தமிழ்' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. தமிழ் திரையுலகில் ஆரம்பகாலத்தில் இவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், தொடர்ந்து தமிழ், மற்றும் தெலுங்கு திரையுலகில் திரைப்படங்களை தேர்வு செய்து நடித்தார்.
இதுவரை இவர் விஜய், அஜீத், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வில்லை என்றாலும், ஜெயம் ரவி, ஜெய்,விஜய் ஆன்டனி, விமல் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு தமிழில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்த இவர், இந்த வருடம் கைவசம் அரை டஜன் படங்கள் வைத்துள்ளார்.
இதனால் கடந்த ஒரு வருடத்திற்கு முன், சித்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரே அடியாக சென்னையில் இருந்து காலி செய்துவிட்டு, ஆந்திராவிற்கு சென்ற அஞ்சலி. தற்போது தமிழ் பட வாய்ப்புகள் வரவே மீண்டும் சென்னைக்கே ரிட்டன் அடித்துள்ளார்.
நடிகர் ஜெய்யுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய அஞ்சலி, தன்னுடைய காதல் கதை எல்லாம் கட்டுக்கதை என கூறி முற்றுப்புள்ளி வைத்து விட்ட நிலையில், தற்போது திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவில் இல்லை. சினிமாவில் மட்டுமே முழு கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.