நடிகர் பார்த்திபன் மீது பாய்ந்த 'FIR '..! பாடலாசிரியர் ஜெயன்கொண்டான் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

Published : May 09, 2019, 04:10 PM IST
நடிகர் பார்த்திபன் மீது பாய்ந்த 'FIR '..! பாடலாசிரியர் ஜெயன்கொண்டான் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

சுருக்கம்

நடிகர் பார்த்திபன் ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில், தன்னை தாக்கி, மேலே இருந்து கீழே தள்ளிவிட்டார் என, பாடலாசிரியரும் நடிகருமான ஜெயம்கொண்டான் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.  

நடிகர் பார்த்திபன் ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில், தன்னை தாக்கி, மேலே இருந்து கீழே தள்ளிவிட்டார் என, பாடலாசிரியரும் நடிகருமான ஜெயம்கொண்டான் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

ஜெயம்கொண்டான், பார்த்திபன் வீடு அமைந்துள்ள, கே.கே.நகர் பகுதியில் 'கவிஞர் கிச்சன்' என்கிற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இங்கிருந்து தான் பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு சாப்பாடு சப்ளை செய்யப்பட்டது. 

மேலும் பார்த்திபன் வீட்டில் ஏதேனும் விசேஷம் என்றால், இவர் தான் வேலைக்கு ஆட்கள் அனுப்பி வைத்துள்ளார். தற்போது இந்த உணவகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மூடிவிட்டு, முழுமையாக திரைப்படங்களில் நடிப்பது, பாடல்கள் எழுதுவது என திரையுலகில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன், பார்த்திபன் ஜெயம்கொண்டானை அழைத்து, திருவான்மியூர் அருகே அவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள தேங்காய்களை பறித்து வருமாறு கூறியுள்ளார். ஜெயம்கொண்டான் தோட்டத்திற்கு சென்றபோது ஒருவரிடம், பார்த்திபனின் தோட்டத்திற்கான வழியை விசாரித்துள்ளார். அந்த நபர் ஏற்கனவே தானும் பார்த்திபனிடம் வேலை பார்த்ததாக கூறி, தன்னை அவர் வேலையை விட்டு நீக்கி விட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த தகவலை பார்த்திபனிடம் ஜெயம்கொண்டான் கூறவே,  தனக்கு பிடிக்காதவரிடம் ஏன் பேசினாய் என்று, பார்த்திபன் ஜெய்னகொண்டானிடம்  வாக்கு வாதம் ஏற்பட்டு கருத்து வேறுபாட்டில் முடிந்தது. 

இந்நிலையில் பார்த்திபனை சந்திப்பதற்காக 'ஒத்த செருப்பு' படத்தின் டப்பிங் பணி நடை பெற்றுக்கொண்டிருந்த, ஃபோர் பிரேம்ஸ்க்கு, அவரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது திடீர் என வெளியே வந்த பார்த்திபன் ஜெயம்கொண்டானை கடுமையாக தாக்கி, மேலே இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார்.

தற்போது  இதுகுறித்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஜெயம்கொண்டான் புகார் அளித்தார். போலீசார் பார்த்திபன் மீது 'FIR ' பதிவு செய்து,  சிசிடிவி கேமராவின் காட்சிகளை வைத்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் ஒரு வருடத்திற்கு முன் பார்த்திபன் வீட்டில், கொள்ள போன நகைக்கும் தனக்கும் சம்மந்தம் உள்ளதாக பார்த்திபன் பொய் புகார் கூறி வருவதாகவும், அதையும் போலீசார் விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த சம்பவம் தற்போது கோலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!