
பேபி ஷாலினியில் ஆரம்பித்து மீனா மகள் நைனிகா, தெய்வத்திருமகள் சாரா வரை தமிழ் திரையில் ஒரு சில குழந்தை நட்சத்திரங்கள் மட்டுமே ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொள்கின்றனர். அதிலும் சிலருக்கு மட்டுமே எதிர்காலத்தில் ஹீரோயினாக வளரும் அளவுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தாலும் ரசிகர்கள் மனதில் ஹீரோயின் அளவிற்கு இடம் பிடித்திருப்பவர் அனிகா சுரேந்திரன்.
கேரள திரையுலகில் மோகன் லால், மம்மூட்டி, ஜெயராம் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் அனிகா. மலையாளத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தமிழில் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்த அனிகாவை ரசிகர்கள் அஜித்தின் ரீல் மகள் என அழைக்கும் அளவிற்கு பிரபலமாகிவிட்டார். அதே போல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மினியேச்சர் போலவே இருப்பதால் அனிகாவை குட்டி நயன் என செல்லமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
குழந்தை நட்சத்திரமாக இருந்தாலும் மாடலிங், சினிமா என கலந்து கட்டி கலக்கி வருகிறார். 16 வயதிலேயே டாப் நடிகைகளுக்கு எல்லாம் டப் கொடுக்கும் விதமாக போட்டோ ஷூட்டிலும் மிளிருகிறார். விதவிதமான உடையில் வளைத்து, வளைத்து போட்டோ ஷூட் நடத்தியதற்கு பலனாக அனிகாவிற்கு ஜாக்பாட் அடித்துள்ளது. மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற கப்பேலா படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘புட்ட பொம்மா’ படத்தில் அனிகா ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே இந்த போடு, போடும் அனிகா, ஹீரோயினாக வேறு மாறிவிட்டால் முன்னணி நடிகைகளின் நிலை என்ன என ரசிகர்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.