பிரபல இயக்குநருடன் மீண்டும் இணையும் கார்த்தி... ஷூட்டிங் குறித்து வெளியான தகவல்...!

Published : Aug 11, 2021, 01:13 PM IST
பிரபல இயக்குநருடன் மீண்டும் இணையும் கார்த்தி... ஷூட்டிங் குறித்து வெளியான தகவல்...!

சுருக்கம்

பொன்னியின் செல்வன் படத்தில் தனது காட்சிகளை நடித்துக் கொடுத்த கையோடு கார்த்தி, இயக்குநர் முத்தையா இயக்க உள்ள புதிய படத்தில் இணைய உள்ளாராம். 

தமிழ் திரையுலகில் முன்ணி நடிகராக வலம் வரும் கார்த்தி தற்போது மணிரத்னத்தின் பிரம்மாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வம் படத்தில் நடித்து வருகிறார். இதில் வந்தியத் தேவனாக மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சுமார் 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து இருப்பதாகவும் இன்னும் ஒரு மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க பொன்னியின் செல்வன் படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பொன்னியின் செல்வன் படத்தில் தனது காட்சிகளை நடித்துக் கொடுத்த கையோடு கார்த்தி, இயக்குநர் முத்தையா இயக்க உள்ள புதிய படத்தில் இணைய உள்ளாராம். முத்தையா, கார்த்தி இணையும் படத்தை கொம்பனை தயாரித்த ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீனே தயாரிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்த பிறகே கார்த்தி பி.எஸ்.மித்ரன் இயக்க உள்ள சர்தார் படத்தில் இணைய உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 


முத்தையா இயக்கிய குட்டிப்புலி, மருது, தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி, கொடி வீரன் ஆகிய படங்கள் பெரிதாக வரவேற்பை பெற்றதாக தெரியவில்லை. ஆனால் முத்தையாவின் இரண்டாவது படமாக கார்த்தி நடிப்பில் வெளியான கொம்பன் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கார்த்தியுடன் ராஜ்கிரண், லட்சுமி மேனன், கோவை சரளா, தம்பி ராமையா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அடுத்தடுத்த தோல்வி காரணமாக தன்னுடைய ஹிட் பட ஹீரோவுடன் முத்தையா மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Songs: தலைவர் ரஜினி வைப்... Gen Z முதல் 90s Kids வரை எனர்ஜி ஏற்றும் 5 மந்திரப் பாடல்கள்!
Music: வார்த்தைகளை சூப்பர் ஹிட்டாக்கிய இளையராஜா.! ராஜா - வைரமுத்து கூட்டணியின் சொக்க வைக்கும் Top பாடல்கள் லிஸ்ட்!