வாழ்க்கையை மாற்றி திரைப்படம்... 29 வருடத்திற்கு பின் தயாரிப்பாளரை சந்தித்த சரத்குமார்! வைரலாகும் புகைப்படம்!

Published : Aug 11, 2021, 02:47 PM IST
வாழ்க்கையை மாற்றி திரைப்படம்... 29 வருடத்திற்கு பின் தயாரிப்பாளரை சந்தித்த சரத்குமார்! வைரலாகும் புகைப்படம்!

சுருக்கம்

'சூரியன்' பட தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன்னை விமான நிலையத்தில் சந்தித்துள்ளார்.

நடிகர் சரத்குமார் வில்லனாக நடித்து, பின்னர் ஹீரோவாக மாறியவர். இவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்று 1992 ஆம் ஆண்டு வெளியான சூரியன் திரைபபடம்.  இந்த படத்தை பிரபல இயக்குனர் பவித்ரன் இயக்கி இருந்தார். நடிகை ரோஜா இந்த படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் மனோரமா, கவுண்டமணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் வெளியாகி சுமார் 29 வருடங்கள் ஆகும் நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளார் கே.டி.குஞ்சுமோன்னை, நடிகர் சரத்குமார் சந்தித்துள்ளார். குறிப்பாக இந்த படத்தின் வெற்றிக்கும் பிறகு தான் பல படங்களில் ஹீரோவாக நடித்து, ரசிகர்கள் மனதியில் நிலையான இடத்தை பிடித்தார் சரத்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் சரத்குமார் 'சூரியன்' பட தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன்னை விமான நிலையத்தில் சந்தித்துள்ளார். அப்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மிகவும் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளந்தாவது... "என் திரையுலக வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த மிகப்பெரிய வெற்றிப்படம் ’சூரியன்’ திரைப்பட தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் அவர்களை சந்திக்க நேரிட்டது. வாழ்க்கை பயணத்தை பற்றி இருவரும் பேசிக் கொண்டோம்" என கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

5 பேருடன் அட்ஜஸ்ட் செய்தால் பிரபல நடிகருக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு: மிர்ச்சி மாதவி ஷாக் பதிவு!
ஜன நாயகன் 2ஆவது சிங்கிள் எப்போது? இதோ வந்துருச்சுல அப்டேட்!