
தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகை ஸ்ரீரெட்டி, தமிழ் முன்னணி பிரபலங்களான, ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், முருகதாஸ், சுந்தர்.சி, உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தனக்கு படவாய்ப்பு தருவதாக கூறி, பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டு ஏமாற்றி விட்டதாக அடுக்கடுக்கான புகார்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.
மேலும் இவர் கூறுவது பொய் என்றும், இவரை விலைமாது எனக் கூறியும் 'சிவா மனசுல புஷ்பா' படத்தை இயக்கிய இயக்குனரும், நடிகருமான வாராகி ஸ்ரீரெட்டி மீது புகார் அளித்தார்.
இதற்கு ஸ்ரீரெட்டி, தன்னை விலைமாது என கூறிய வாராகி மீது தகுந்த நடவடிக்கை எடுக்ககோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் இவர் தரப்பில் இருந்து புகாரளித்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வீண் விளம்பரத்திற்காக வாராகி தம்மை ஊடகங்களில் தவறாகப் பேசியதாகவும், தம்மை மிரட்டும் வகையில் பேசிய அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளித்துள்ளதாகவும் கூறினார்.
பின் கடந்த சில தினங்களாக நடிகர்கள் பற்றி எந்த ஒரு பாலியல் குற்றங்களை முன் வைக்காமல் இறந்த ஸ்ரீரெட்டி, திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடுவதில் தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஸ்ரீரெட்டி தொடர் பாலியல் குற்றங்களை முன் வைத்தபோது, அவரை பற்றி பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் விமர்சித்து தான் பேசினார். ஆனால் ஒரு முன்னணி நடிகை கூட இவருக்கு ஆதரவாக பேசவில்லை. இந்நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவளிக்கும் விதத்தில் நடிகை ஆண்ட்ரியா பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளது. "ஸ்ரீரெட்டி சொல்வது உண்மை என்றால், இப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்க வலிமையான இதயம் வேண்டும். நான் இதுபோன்று எதுவும் சந்தித்ததில்லை. இவர் சந்தித்ததாக வெளிப்படையாக கூறுவது சரிதான். இதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும்" என ஆண்ட்ரியா கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.