
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து நடிகர் விஜய் நேரில் சென்று ஸ்டாலினிடம் விசாரித்தார். பின்னர் அவர் சர்கார் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்று விட்டார்.
இந்நிலையில்தான் கடந்த வாரம் கருணாநிதி மரணமடைந்தார். அவரது உடலுக்கு நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், மனைவி சங்கீதா ஆகியோர் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
.இந்த நிலையில், இன்று அதிகாலை படப்பிடிப்பு முடிந்து அமெரிக்காவில் இருந்து நடிகர் விஜய் தமிழகம் திரும்பினார். இதையடுத்து காலை 4 மணியளவில் கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.
அந்த அதிகாலை நேரத்திலும் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்திருந்தனர்.
நேற்று விடுமுறை தினம் என்பதால், கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.