நடிகை அமலா பாலுக்கு மொத்தம் 15 கணவர்களாம் பாஸ்...’ஆடை’ மேடையிலேயே சொல்றாங்க...

Published : Jul 07, 2019, 12:50 PM IST
நடிகை அமலா பாலுக்கு மொத்தம் 15 கணவர்களாம் பாஸ்...’ஆடை’ மேடையிலேயே சொல்றாங்க...

சுருக்கம்

இனி சர்ச்சையான படங்களும் சர்ச்சையான பேச்சுக்களும் மட்டுமே தமிழ் சினிமாவில் நம்மைக்காப்பாற்றும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாரோ என்னவோ நிர்வாணக்காட்சியில் காவல் காத்த 15 பேருமே என் கணவர்கள் என்று பேசியிருக்கிறார் ‘ஆடை’புகழ் அமலாபால்.

இனி சர்ச்சையான படங்களும் சர்ச்சையான பேச்சுக்களும் மட்டுமே தமிழ் சினிமாவில் நம்மைக்காப்பாற்றும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாரோ என்னவோ நிர்வாணக்காட்சியில் காவல் காத்த 15 பேருமே என் கணவர்கள் என்று பேசியிருக்கிறார் ‘ஆடை’புகழ் அமலாபால்.

அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஆடை’. இப்படத்தை ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரத்னகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்துள்ளதால் தணிக்கை குழு இப்படத்திற்கு ''ஏ'' சான்றிதழ் அளித்துள்ளது. தொடர்ந்து வருகிற டீஸர்களும் ட்ரெயிலர்களின் இப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்தவண்ணம் உள்ளன.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதன்படி இப்படம் வருகிற 19-ந் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் அமலாபால் பேசுகையில், "ஆடை படத்தில் நிர்வாண காட்சியில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தாலும், அந்த காட்சியின் படப்பிடிப்பின்போது எனக்கு படபடப்பாகவே இருந்தது. ஆனால் படக்குழுவினர் எனக்கு முழு பாதுகாப்பு அளித்தனர். 

அந்த காட்சி படமாக்கப்பட்டபோது கேமரா மற்றும் லைட்டிங் குழுவில் உள்ள 15 பேர் தவிர அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பாஞ்சாலிக்கு கூட ஐந்து கணவர்கள் தான் பாதுகாப்பாக இருந்தனர். ஆனால் எனக்கு இந்த 15 பேரும் கணவர்கள் போல தேவையான முழு பாதுகாப்பை அளித்தனர். இந்த அளவுக்கு அவர்கள் எனக்கு பாதுகாப்பு தரவில்லை என்றால் என்னால் அந்த காட்சியில் நடித்திருக்கவே முடியாது'' என்றார்.நிகழ்ச்சிக்கு வந்திருந்த படப்பிடிப்பு குழுவைச் சேர்ந்த ஒன்றிரண்டு கணவர்கள் அமலாவின் பேச்சைக்கேட்டு நெளிந்தனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடிகைகளை பார்த்ததும் ஈ போல் மொய்க்கும் ரசிகர்கள்... நிதி அகர்வாலை தொடர்ந்து சமந்தாவுக்கும் இந்த நிலைமையா?
கிறிஸ்துமஸ் விருந்தாக இந்த வாரம் தியேட்டர் & OTT-யில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன?