
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் முதல் ஏவிக்ஷன் இன்று நடைபெற உள்ளது. எனவே பிக்பாஸ் வீட்டை விட்டு, முதலில் வெளியேறப்போகும் பிரபலம் யார்? என தெரிந்து கொள்வதில் ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.
அதே நேரத்தில், நேற்றைய நிகழ்ச்சியின் முடிவின் போது, கமலஹாசன் பிக்பாஸ் வீட்டை விட்டு, எந்த போட்டியாளர் வெளியேற்ற நினைக்கிறீர்கள் போட்டியாளர்களிடம் கமல் கேட்டதற்கு, நடிகை ஜாங்கிரி மதுமிதா வெளியேற வேண்டுமென நினைப்பதாக, பெரும்பாலான போட்டியாளர்கள் தெரிவித்தனர்.
ஆனால் கமல் நேற்று நிகழ்ச்சியின் முடிவில் அதிகப்படியான மக்களின் வாக்குகளை பெற்று மதுமிதா விக்ஷனில் இருந்து காப்பாற்ற பட்டதாக தெரிவித்து, அவரை வெளியேற்ற துடித்த பிரபலங்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இந்த வாரத்தில் மட்டும் ஏவிக்ஷன் லிஸ்டில் மொத்தம் 7 போட்டியாளர்கள் இருந்த நிலையில், நேற்று மதுமிதா காப்பாற்ற பட்டதாக அறிவித்தார். அவரை அடுத்து தற்போது சேரன், மீரா, பார்த்திமா, கவின், சாக்ஷி, சரவணன் என ஆறு பேர் இந்த லிஸ்டில் உள்ளனர். இவர்களில் யார் மிகவும் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேற உள்ளனர் என்பதை அறிவிக்கும் நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாக உள்ளது.
இது குறித்த ஒரு ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது. இதில் கமலஹாசன், ஏவிக்ஷன் பற்றி பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஏவிக்ஷன் கார்டை கையில் வைத்துக்கொண்டு வழக்கமான பரபரப்பு வெளியேறப் போவது யார் என ரசிகர்களிடமும் பிக் பாஸ் போட்டியாளர் உள்ளது. இதில் யார் பெரியார் உள்ளது என்பது எனக்கு தெரிந்துவிட்டது இதை தெரிந்து கொள்ள போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களும் ஆவலோடு உள்ளனர் என பேசியுள்ளார் என பேசியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.