சொந்த இடத்தில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்த நடிகர் யோகிபாபு!

Published : Aug 26, 2021, 12:46 PM IST
சொந்த இடத்தில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்த நடிகர் யோகிபாபு!

சுருக்கம்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களாக இருந்த வடிவேலு மற்றும் சந்தானம் இருவருமே ஹீரோவாக நடிக்கத் துவங்கிய பின்பு,  சிறந்த காமெடி நடிகர் என்கிற இடத்தை பிடிக்க பலர் போட்டி போட்ட நிலையில் இந்த இடத்தை நிரம்பியவர் காமெடி நடிகர் யோகி பாபு தான். இவர் தன்னுடைய சொந்த இடத்தில் கோவில் ஒன்றை கட்டி கும்பாபிஷேகம் செய்துள்ள தகவல் தற்போது வெளியாகவே இவருக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை தற்போது தன்னுடைய டைமிங் காமெடியால் ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருபவர் யோகிபாபு.  மேலும் ரஜினி, அஜித், விஜய், என முன்னணி ஹீரோக்கள் படங்களில் காமெடி வேடத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சில காமெடி படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.  அதே நேரத்தில் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் எந்தவிதமான காமெடி காட்சியாக இருந்தாலும் அதில் இறங்கி நடித்து அசத்துகிறார் யோகி பாபு.

தற்போது இவரின் கைவசம் எக்கச்சக்கமான படங்கள் உள்ளது. பிஸியாக வலம் வரும் யோகிபாபு தன்னுடைய திருமணத்தை கூட மிகவும் ரகசியமாக செய்துகொண்டார். சமீபத்தில் இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்த தகவலையும் வெளியிட்டிருந்தார். வாழ்க்கையில் அடுத்தடுத்து வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் யோகி பாபு மிகப் பெரிய முருக பக்தர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர் தன்னுடைய சொந்த இடத்தில், கோவில் ஒன்றை கட்டி கும்பாபிஷேகம் செய்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல் நகரம் பேடு கிராமத்தில், நடிகர் யோகிபாபுவிற்கு சொந்தமாக இடம் இருக்கிறது. இங்கு வாராஹி அம்மனுக்கு கோவில் கட்டி வெகுவிமர்சையாக இன்று கும்பாபிஷேகத்தை நடத்தி உள்ளார். இதில் யோகிபாபுவின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதைத்தொடர்ந்து யோகிபாபுக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாட்டாமை டீச்சரின் மகளா இது? அம்மாவை தொடர்ந்து சரத்குமாருடன் நடித்த மகள்: ரசிகர்கள் அதிர்ச்சி!
கயாடு லோஹர் முதல் த்ரிஷா வரை: 2025-ல் அதிகம் பேசப்பட்ட, சோஷியல் மீடியை கலக்கிய டாப் 6 நடிகைகளின் பட்டியல்!