இனி ஒரு உயிர் கூட போக கூடாது! நான் வணங்கும் முருகப்பெருமான் காப்பாற்றுவார்: யோகி பாபு வெளியிட்ட வீடியோ!

Published : Mar 28, 2020, 04:14 PM ISTUpdated : Mar 29, 2020, 11:49 AM IST
இனி ஒரு உயிர் கூட போக கூடாது! நான் வணங்கும் முருகப்பெருமான் காப்பாற்றுவார்: யோகி பாபு வெளியிட்ட வீடியோ!

சுருக்கம்

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாலும் நாளுக்கு நான் தன்னுடைய கோர முகத்தை காட்ட துவங்கியுள்ளது. இதில் இருந்து தற்காத்து கொள்ள, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாலும் நாளுக்கு நான் தன்னுடைய கோர முகத்தை காட்ட துவங்கியுள்ளது. இதில் இருந்து தற்காத்து கொள்ள, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் தினமும் இரண்டு முதல் மூன்று பேர் வரை கொரோனா பதிப்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக, சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தன்னுடைய, ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகிறார்.

மேலும் பிரபலங்கள் பலரும், ரசிகர்களும், பொதுமக்களும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறார்கள்.

குழந்தை பருவத்தை நினைவூட்டிய தூர்தஷன்! 'மஹாபாரதம்' பார்த்த மகிழ்ச்சியில் காஜல் போட்ட ட்விட்!

அந்த வகையில், பிரபல காமெடி நடிகர் யோகி பாபு, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கொரோனா விழுப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வைரஸில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள, நம் பாரத பிரதமர் கூறியபடியும், முதலமைச்சர் கூறிய படியும்
ஊரடங்கு உத்தரவின்படி காவல்துறைக்கு நாம் ஒத்துழைப்பு தர வேண்டும்.

கொரோனாவை தடுக்க நடிகர் அக்ஷய் குமார் 25 கோடி நிதி உதவி!

இந்த வைரஸால் பல உயிர்கள் போய்க்கொண்டிருக்கிறது. இனி ஒரு உயிர் கூட போகக் கூடாது. அதனால் அரசாங்கம் சொல்லும்படி நாம் கேட்டு நடந்தால் இந்த வைரஸில் இருந்து தப்பிக்கலாம். இதையெல்லாம் தாண்டி தான் வணங்கும் முருகப்பெருமான் கண்டிப்பாக இந்த வைரஸ் இருந்து காப்பாற்றுவார். மற்ற தெய்வங்களும் நம்மை காப்பாற்றும். தெய்வங்களையும் நாம் வேண்டி கொள்வோம் என நடிகர் யோகிபாபு உருக்கமாக தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோ இதோ:

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் சேதுபதியை கலாய்த்த கானா வினோத்... காமெடி ஜட்ஜால் பிக் பாஸ் கோர்ட்டில் சிரிப்பலை..!
மாமனார் - மருமகன் மோதல்; குடும்ப சண்டையால் பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2; ஹைலைட்ஸ்!