Latest Videos

விமல் நடிக்கும் 'மா.பொ.சி' படத்தின் டைட்டில் திடீர் மாற்றம்! தனுஷ் பட தலைப்பை சூட்டிய இயக்குனர்!

By manimegalai aFirst Published Jun 14, 2024, 7:12 PM IST
Highlights

நடிகர் போஸ் வெங்கட் விமலை ஹீரோவாக வைத்து இயக்கி வந்த 'மா.பொ.சி' படத்தின் தலைப்பை மாற்றுவதாக தற்போது படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
 

சீரியல் நடிகராக பிரபலமாகி, பின்னர் வெள்ளி திரையில் வலுவான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வந்தவர், போஸ் வெங்கட். இவர் கடனட்டை 2020-ஆம் ஆண்டு வெளியான "கன்னி மாடம்" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஸ்மால் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக சிறந்த இயக்குனர் என போஸ் வெங்கட்டுக்கு பெயர் வாங்கி கொடுத்தது.  

இதை தொடர்ந்து நான்கு ஆண்டுகள் சமீபத்தில் தன்னுடைய இரண்டாவது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். விமல் ஹீரோவாக நடிக்கும் இந்த படம் சமூக நோக்கத்துடன் எடுக்கப்பட உள்ளதாகவும் இப்படத்திற்கு 'மா.பொ.சி' என பெயர் வைத்துள்ளதாக படக்குழு அறிவித்தது. இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தை தயாரிக்க உள்ளார். 

இந்நிலையில் படக்குழு திடீர் என இப்படத்தின், டைட்டிலை மாற்றி விட்டதாக அறிவித்து புதிய டைட்டிலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருபதாவது, பத்திரிக்கை ஊடகத்துறை நண்பர்களுக்கு வணக்கம். 

"எங்களது SSS Pictures  தயாரிப்பில்,  வெற்றிமாறனின் திரைப்பட நிறுவனமான கிராஸ் ரூட் நிறுவனம் வழங்கும், இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர்  விமல் நடிப்பில் உருவான, “மா.பொ.சி.”  திரைப்படதிற்கு, சில தவிர்க்க முடியாத காரணங்களால், சார் என்ற  என்ற புதிய தலைப்பினை சூட்டியுள்ளோம். 

அன்பு பத்திரிகை ஊடகத்துறை நண்பர்கள்,  உங்கள் ஆதரவினை தொடர்ந்து வழங்க கேட்டுக்கொள்கிறோம்.  படத்தின் புதிய தலைப்புடன் கூடிய போஸ்டர், டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்." என தெரிவித்துள்ளனர். தமிழில் நடிகர் தனுஷ் நடித்த 'வாத்தி' படத்திற்கு தெலுங்கில் 'சார்' என படக்குழு பெயர் சூட்டியது குறிப்பிடத்தக்கது.

click me!