விமானத்தில் ஏற்பட்ட திடீர் பிரச்சனையால்... நடு வானில் சிக்கிய விக்ரம் - துருவ்..! பின் என்ன நடந்தது தெரியுமா?

Published : Aug 03, 2021, 12:08 PM IST
விமானத்தில் ஏற்பட்ட திடீர் பிரச்சனையால்... நடு வானில் சிக்கிய விக்ரம் - துருவ்..! பின் என்ன நடந்தது தெரியுமா?

சுருக்கம்

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் இருவரும் ஷூட்டிங்கிற்காக டார்ஜிலிங் சென்ற போது... நடு வானில் விமானத்தில் பழுது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, விமானம் டார்ஜிலிங் செல்லாமல் மீண்டும் சென்னையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.  

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் இருவரும் ஷூட்டிங்கிற்காக டார்ஜிலிங் சென்ற போது... நடு வானில் விமானத்தில் பழுது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, விமானம் டார்ஜிலிங் செல்லாமல் மீண்டும் சென்னையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ், இருவரும் இணைந்து இன்னும் பெயரிடாத படமான 'விக்ரம் 60 ' படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை, இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். கொரோனா பிரச்சனை காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், சமீபத்தில் மத்திய - மாநில அரசுகள், படப்பிடிப்புக்கு சில கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி கொடுத்துள்ளதால், வெளியிடங்களுக்கு சென்று எடுக்கும் காட்சியை படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

அதன்படி,  'விக்ரம் 60 ' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில்,  படக்குழுவினர் டார்ஜிலிங் செல்ல தயாராகினர், அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து விமானம் மூலம் படக்குழுவினர் 60 பேர் டார்ஜிலிங் புறப்பட்டனர். ஆனால் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தில் சிறிய அளவிலான பழுது ஏற்பட்டதாக கூறியதும், படக்குழுவினர் அனைவரும் ஆடி போய் விட்டார்களாம். இவர்களுடன் விக்ரம் மற்றும் துருவ் ஆகியோரும் உடன் இருந்துள்ளனர்.

பின்னர் விமானம் டார்ஜிலிங் செல்லாமல்... 45 நிமிடத்தில் மீண்டும் சென்னைக்கே வந்து பத்திரமாக தரையிறங்கியுள்ளது. முதல் நாள் குறித்த நேரத்திற்கு படக்குழு டார்ஜிலிங் செல்லவில்லை என்றாலும், மறுநாள் படப்பிடிப்புக்காக விமானத்தில் டார்ஜிலிங் சென்றுள்ளனர். இந்த படத்தில் துருவுக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடித்து வருகிறார். விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படத்தை, மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது, 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம். தற்போது இறுதி காட்ட படப்பிடிப்பில் படக்குழுவினர் பிசியாக இருக்கின்றனர். இதே வேகத்தில் அனைத்து பணிகளையும் முடித்து, இந்த படத்தை வெளியிடவும் முடிவு செய்துள்ளது படக்குழு. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

5 பேருடன் அட்ஜஸ்ட் செய்தால் பிரபல நடிகருக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு: மிர்ச்சி மாதவி ஷாக் பதிவு!
ஜன நாயகன் 2ஆவது சிங்கிள் எப்போது? இதோ வந்துருச்சுல அப்டேட்!