
சினிமா வாய்ப்பு கேட்டு வரும் இளம் பெண்களையும், மாடல் அழகிகளையும் கட்டாயப்படுத்தி ஆபாச படமெடுத்ததாக பிரபல நடிகையின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார். வெப் தொடரில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை ஆடைகளை அகற்ற கட்டாயப்படுத்தி, ஆபாச படமெடுத்ததாகவும், அதனை இங்கிலாந்தைச் சேர்ந்த பிரதீப் பக்ஷியின் கென்ரின் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து விற்பனை செய்ததாகவும் ராஜ் குந்த்ரா மீது பகீர் குற்றச்சாட்டுக்கள் கிளம்பியது. ஒரு படத்திற்கு 5 லட்சம் ரூபாய் வீதம் ராஜ் குந்த்ரா கோடிகளைக் குவித்த சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராஜ்குந்த்ராவுக்கும், ஷில்பா ஷெட்டிக்கும் 2019-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராஜ்குந்த்ரா தற்போது 14 நாள் நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக ஷில்பா ஷெட்டியையும் போலீஸார் விசாரித்த நிலையில், அவரை சுற்றியும் நிறைய வந்ததிகள் உலா வந்தன. இதையடுத்து, ஷில்பா ஷெட்டி சில ஊடக நிறுவனங்கள் மீது தனிப்பட்ட முறையில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த ஆபாச படம் தயாரித்த விவகாரத்தில் யார் யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆபாச படமெடுத்த விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தொடர்புள்ளதா? என விசாரணை நடத்திய போலீசார், இந்த விவகாரத்தில் அவருக்கு தொடர்பில்லை என தெரிவித்தனர். இந்நிலையில் ராஜ்குந்த்ராவின் ஆப் மூலமாக 51 ஆபாச படங்கள் கைப்பற்றுள்ளதாக மும்பை போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது பாலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அவருடைய கணினி மற்றும் செல்போனில் இருந்தும் எராளமான ஆபாச படங்கள் நிரம்பியுள்ளதாகவும், அதனை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.