
தல ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், நேற்று இரவு 10 :45 மணிக்கு வலிமை படத்தில் இருந்து, 'வேற மாறி' ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியான நிலையில், 12 மணிநேரத்திற்கு முன்பாகவே இப்பாடல் 4 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.
தல அஜித்துக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் பற்றி சொல்லவே வேண்டாம்... அவரது படம் குறித்த எந்த தகவல் வந்தாலும் அதனை வேற லெவலுக்கு ட்ரெண்ட் செய்து விடுவார்கள். இந்நிலையில் நேற்று திடீர் என, வலிமை படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்த நிலையில், ரசிகர்கள் இந்த பாடலை காண காலையில் இருந்தே வெறித்தனமாக வெயிட் செய்தனர். முதலில் 7 மணிக்கு 'வேற மாறி' பாடல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் திடீர் என இரவு 10 :45 மணிக்கு வெளியிட உள்ளதாக ட்விட்டர் மூலம் தெரிவித்தது படக்குழு.
இரவு நேரத்தில் பாடல் வந்தாலும் தல -ரசிகர்கள் வெறித்தனமாக இந்த பாடலை வரவேற்று கொண்டாடி மகிழ்ந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் இயக்குநர் விக்னேஷ்சிவன் இந்த பாடலை எழுதியுள்ளார். இதற்கு முன்னதாக 'என்னை அறிந்தால்' படத்தில் அவர் எழுதிய 'அதாரு அதாரு' சூப்பர் ஹிட் அடித்திருந்தது. இந்த பாடல் தான் படத்தின் ஓபனிங் சாங் என கூறப்படுகிறது. இதற்காக ஒடிஷாவில் இருந்து டிரம் கலைஞர்களை சென்னை வரவழைத்து லைவ் ரெகார்டிங் செய்திருக்கிறார் யுவன். பட்டையைக் கிளப்பும் இசையில் பாடல் வெளியான 12 மணிநேரத்திற்கு உள்ளாகவே சுமார் 4 மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர். தல அஜித் யங் கெட்டப்பில் தோன்றி அசத்தி இருப்பது இந்த பாடலின் கூடுதல் பலம்...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.