
வங்கிக் கொள்ளையை கதைக் களமாக கொண்டு நெட் பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம். கிட்டதட்ட அனைத்து மொழிகளும் வெளியான இந்த வெப் தொடர் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. முதல் இரண்டு சீசன்கள் ராய்ல் மின்ட் ஆஃப் ஸ்பெயின் என்கிற யூரோ கரன்சிகளை அச்சடிக்கும் இடத்தைச் சுற்றியும், அடுத்த இரு பாகங்கள் பேங்க் ஆஃப் ஸ்பெயின் என்கிற ஸ்பெயின் நாட்டு அரசின் தங்கத்தை வைத்திருக்கும் இடத்தை சுற்றியும் வெளியானது.
நான்காவது சீசன் போலீஸுக்கும், கொள்ளையர்களுக்கும் இடையிலான போராட்டத்தோடு நிறைவடைந்தது. அதிலும் குறிப்பாக மணி ஹெய்ஸ்டர் தொடரில் அனைவரது மனம் கவர்ந்த நைரோபி சுட்டுக் கொல்லப்படும் காட்சிகள் கடும் விமர்சனங்களைக் கூட வெப் சீரிஸுக்கு கொண்டு வந்தது. அடுத்த தொடரில் நைரோபியை உயிருடன் காண்பிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கும் அளவிற்கு ரசிகர்கள் மணி ஹெய்ஸ்டர் வெப் தொடருடன் ஒன்றிணைந்துவிட்டனர். புரோபசர், லிஸ்பன், டோக்கியோ, நைரோபி, மாஸ்கோ, ரியோ என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
காதல், சோகம், துரோகம், ஏமாற்றம், திட்டமிடல், பிரிவு, மரணம் என நொடிக்கு நொடி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெப் தொடர் இயக்கப்பட்டிருந்தது. தற்போது ஐந்தாவது சீசன் உடன் வெப் சீரிஸ் முடிவுக்கு வர உள்ளதாக தெரிகிறது. எனவே மணி ஹெய்ஸ்ட் சீசன் 5 முதல் மற்றும் இரண்டாவது பாகத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். உலகம் முழுவதும் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்புடன் காத்திருந்த மணி ஹெய்ஸ்ட் சீசன் 5க்கான டிரெய்லர் சரியாக 7 மணிக்கு வெளியானது. இதில் 5 ஆவது சீசனின் முதல் பகுதி செப்டம்பர் 3 ஆம் தேதியும், இரண்டாம் பகுதி டிசம்பர் 3 ஆம் தேதியும் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் மிதக்கவிட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.