படப்பிடிப்பில் விபத்து...! நடிகர் விஜய் வசந்துக்கு நேர்ந்த சோகம்..!

First Published Jun 24, 2018, 12:48 PM IST
Highlights
actor vijay vasanth met accident in shooting spot


பிரபல நடிகர் விஜய் வசந்த் நடித்து சமீபத்தில் வெளியான வேலைக்காரன், திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் தற்போது இயக்குனர், ரஞ்சன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் “ மை டியர் லிசா ”  என்கிற படத்தில் விஜய் வசந்த் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

திகில் படமாக உருவாகிக் கொண்டிருக்கும் 'மை டியர் லிசா' படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் விறு விறுப்பாக நடை பெற்றுக் கொண்டிருந்தது.

இந்நிலையில் நடிகர் விஜய் வசந்த் ரவுடிகளுடன் மோதும் சண்டை காட்சி ஊட்டி மலை பாதையில் படமாக்கப்பட்டு வந்தது.  அப்போது எதிர்பாராத விதமாக அவரது கால் பள்ளத்தில் சிக்கியதால் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவரது கால் மீது முழு உடம்பும் அழுத்தியதால் எதிர்பாராத விதமாக அவரின் கால் முறிந்தது.

உடனடியாக இவரை படக்குழுவினர் ஊட்டியில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது. இந்த விபரீத சம்பவத்தால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு சென்னைக்கு திரும்பினர் படக்குழுவினர். 

பின் சென்னையில் தற்போது விஜய் வசந்திற்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. இவரை சோதனை செய்த மருத்துவர்கள், விஜய்க்கு காலில் முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து 3 வாரம் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று அறிவுரிதியுள்ளதாக தெரிவித்தனர். 

இந்த விபத்து காரணமாக படப்பிடிப்பை ஒரு மாதம் தள்ளி வைத்துள்ளனர் படக்குழுவினர். 
  
 

click me!