பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்...! கமலுக்கே அழைப்பு விடுக்கும் ஆர்.கே.செல்வமணி...!

 
Published : Jun 24, 2018, 12:05 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்...! கமலுக்கே அழைப்பு விடுக்கும் ஆர்.கே.செல்வமணி...!

சுருக்கம்

rk selvamani invite the protest for against bigboss show

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர் பெப்சி அமைப்பை சேந்தவர்கள். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்களுக்கு இவர்கள் சில கோரிக்கைகளையும் வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகள் ஏற்கப்படாமல் நிராகரிக்கும் பச்சத்தில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி. 

வேலை பிரச்சனை:

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் மட்டும் மொத்தம் 400பேர் வேலை செய்து வருகிறார்கள். அவர்களில் கமல் உட்பட பெப்சி உறுபினர்கள் 41 பேருக்கு மட்டுமே வேலை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் ரீதியாக பலர் பாதிக்கப்பட்டு பிரச்சனை ஏற்படுவதால் ஆர்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார் ஆர்.கே.செல்வமணி.

ஏமாற்றினார்களா..?

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கும் 10 நாட்களுக்கு முன்பே பெப்சி உறுபினர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் EVP பிலிம் சிட்டியில் வேலை செய்கிறார்களா என கேட்டதற்கு... வேலை செய்வதாக கூறப்பட்டது. ஆனால் தனி தனி யூனியனாக நாங்கள் பார்த்த போது நிறைய உறுபினர்கள் வேலை செய்வதாக நினைத்தோம். தற்போது ஒட்டு மொத்தமாக பார்த்த போது தான் இந்த உண்மை தெரியவந்ததாக கூறியுள்ளார்.

தொழில் ரீதியாக பலர் பாதிக்கப்படுவதால், இந்த பிரச்னையை சுமூகமாக முடிக்க முடிவு செய்து அமைதியாக இருந்தோம். ஆனால் தங்களின் அமைதியை அவர்கள் இயலாமை என்று  எடுத்துக்கொண்டதால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டம்:

இது குறித்து சின்னத்திரை பொதுச்செயலாளரை போனின் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும், EVP பிலிம் சிட்டி மேலாளரிடமும் பேசியுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளதால், அவர்கள் வார்த்தைக்கு மரியாதை கொடுக்கும் விதத்தில் வரும் 29ஆம் தேதி வரை அவர்களுக்கு கெடு கொடுக்கப்படும் என்றும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்றால் 30ஆம் தேதி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

கமல் அழைப்பு:

மேலும் தங்களுடைய கோரிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில் இனி, EPV பிலிம் சிட்டியில் எந்த ஒரு வேலையையும் பெப்சி ஊழியர்கள் செய்ய மாட்டோம் என்றும், இங்கு நடக்கும் பட விழாக்களையும் புறக்கணிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

அதே போல் தங்களுடைய பிரச்சனை என்ன என்பதை புரிந்து நடிகர் கமல்ஹாசன் தங்களுக்கு பக்க பலமாக நிற்பார் என்று ஆர்.கே.செல்வமணி இந்த ஆர்பட்டதிக்கு கமலின் ஒத்துழைப்பு இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனும் பெப்சி உறுப்பினர்களில் ஒருவர் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். 

நடிகர் கமல்ஹாசனும் பெப்சி உறுப்பினர் என்பதன் அடிப்படையில், பிக்பாஸ் நிகழ்சிக்கு எதிராக நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்பாரா...? இல்லை பெப்சி ஊழியர்கள் வேலை பெற உதவுவாரா...? என பொறுத்திருந்து பார்ப்போம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜயகாந்த் மகன் ஹீரோவாக பாஸ் ஆனாரா? ஃபெயில் ஆனாரா? கொம்புசீவி விமர்சனம் இதோ
2025-ல் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிசுருட்டியும் அட்டர் பிளாப் ஆன டாப் 5 படங்கள்