தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் அதிக மதிப்பெண் பெற்ற டாம் 3 பிளஸ் 2 மறுறம் எஸ்எஸ்எல்சி மாணவ மாணவிகளை விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்து வருகின்றனர்.
நடிகர் விஜய் தமிழ்நாட்டில் கடந்த 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வுகளின் அதிக மதிப்பெண் பெற்ற 1500 மாணவ, மாணவிகளை சந்தித்து உரையாட இருக்கிறார் என்றும் வரும் ஜூன் மாதம் இந்தச் சந்திப்பு நடக்க உள்ளது என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான விஜய் படங்களில் நடிப்பது தவிர புதிக கட்சியையும் தொடங்கி அரசியலில் குதிக்கப் போகிறார் என்று அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தனது 70வது திரைப்பட பணிகளை முடித்துவிட்டு அரசியல் கட்சி ஆரம்பிப்பது தொடர்பான வேலையில் இறங்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது.
திருச்சியில் மாநாடு நடத்தி அரசியல் பிரவேசத்தை அறிவிக்க வேண்டுத் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், அரசியலில் நுழைவதற்கு ஆயத்தமாக விதவிதமான நிகழ்வுகளில் விஜய் மக்கள் இயக்கம் ஈடுபட்டு வருகிறது. முதல் கட்டமாக தலைவர்களின் சிலைக்கு மாலை போட்டு மரியாதை செய்யும் பணியில் மும்முரமாக உள்ளனர்.
குமரியில் சொகுசுப் படகு சவாரி ஆரம்பம்! படகு இல்லத்திலிருந்து வட்டக்கோட்டை வரை இயக்கம்!
மாணவர்ளுடன் சந்திப்பு
இதனிடையே, நடிகர் விஜய் நடந்து முடிந்து 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற சுமார் 1500 மாணவ மாணவிகளை சந்தித்து பேச உள்ளதாகவும் அவர்களுக்கு நிதி உதவியும் கொடுக்கப் போகிறார் என்றும் தகவல் வந்திருக்கிறது.
இதற்காக தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் அதிக மதிப்பெண் பெற்ற டாம் 3 பிளஸ் 2 மறுறம் எஸ்எஸ்எல்சி மாணவ மாணவிகளை விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்து வருகின்றனர். அவர்களோடு பெற்றோரை இழந்து வாடும் சிறந்த மாணவ மாணவிகளையும் விஜய் சந்தித்து நிதி வழங்குவார் எனத் தெரிகிறது.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாணவ மாணவிகளின் பட்டியலைத் தயாரித்து தலைமைக்கு அனுப்பியுள்ளது. ஜூன் மாதம் இந்த சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கலாம் என விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரிவிக்கின்றனர். சந்திப்பை நடத்த நான்கு இடங்களைப் பரிசீலித்து வருகிறார்கள். ஸ்ரீவாரி வெங்கடேஸ்வரா திருமண மண்டபம், நந்தம்பாக்கம் வர்த்தக மையம், நீலாங்கரையில் உள்ள ஆர். கே. திருமண மண்டபம், புழல் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் ஆகியவற்றில் ஒன்றில் நிகழ்வு நடக்கலாம் எனக் கருதப்படுகிறது.
குனோ தேசிய பூங்காவில் மேலும் 2 சிறுத்தை குட்டிகள் இறப்பு! ஒரே வாரத்தில் 3வது முறை!
பிசிப் பிணியைப் போக்க
பசி பிணியை போக்குவது குறித்து விழிப்புணர்வு உண்டாக்கும் நோக்கில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மே 28ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இலவச மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மதிய உணவு விநியோகிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம், பகுதி வாரியாக மே 28ஆம் தேதி இலவச மதிய உணவு வழங்கப்படும் என்று விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.
ஆவின் மீது முதல்வருக்கு திடீர் பாசம் ஏன்? அறிக்கை விட்ட பாஜக தலைவர் அண்ணாமலை