நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடித்துள்ள 'ஜப்பான்' படத்தின் இன்ட்ரோ டீசர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்யாசமான கதைகளை இயக்கி வரும் இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ஜப்பான். இதுவரை ராஜு முருகன் இயக்கிய படங்களிலேயே இப்படம் மிகவும் வித்தியாசமாக இருப்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது.
கார்த்தி நடித்துள்ள 'ஜப்பான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து, போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக, அண்மையில் அறிவிப்பு ஒன்று வெளியானது. இதைத்தொடர்ந்து கார்த்தியின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக, ஜப்பான் படத்தில் இருந்து கார்த்தியின் இன்டோ டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் கார்த்தியை ஆண்டவனின் அதிசய படைப்பு, ஹீரோ, காமெடியன், டர்ட்டி வில்லன், என சில வசனங்கள் இடம் பெற்றுள்ளது, இவருடைய கதாபாத்திரத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் கார்த்தியின் தோற்றமே ரசிகர்களைக் கவரும் விதத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அணு இமானுவேல் நடித்துள்ளார். மேலும் சுனில், விஜய் மில்டன், வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் இந்த படத்தை எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ் ஆர் பிரபு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, ரவிவர்மன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபாவளிக்கு இப்படம் ரிலீஸ் ஆவது உறுதியாகி உள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி குறித்த தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.