பிரபாஸின் 'ஆதி புருஷ்' படத்தில் இருந்து 'ராம் சியா ராம்' இரண்டாம் சிங்கிள் பாடல்! வெளியாகும் தேதி அறிவிப்பு!

Published : May 25, 2023, 12:47 PM IST
பிரபாஸின் 'ஆதி புருஷ்' படத்தில் இருந்து 'ராம் சியா ராம்' இரண்டாம் சிங்கிள் பாடல்! வெளியாகும் தேதி அறிவிப்பு!

சுருக்கம்

நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் 'ஆதி புருஷ்' திரைப்படத்தில் இடம் பெற்ற 'ராம் சியா ராம்..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.  

ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' எனும் திரைப்படம், மீண்டும் புதிய சரித்திரத்தைப் படைக்கத் தயாராகிறது. இந்த படத்தில் இடம்பெறும் 'ராம் சியா ராம்..' என தொடங்கும் இரண்டாவது பாடல், மே 29ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே தருணத்தில் வெளியாகிறது. 

இசையமைப்பாளர்களான சாசெட்- பரம்பரா ஆகியோரின் இசையமைப்பில் பாடலாசிரியரும், கவிஞருமான மனோஜ் முன்டாஷீர் எழுதிய இந்த பாடல், எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் உருவாகியுள்ளது. திரைத்துறை சேனல்கள், இசை சேனல்கள் , ஏனைய பொழுதுபோக்கு சேனல்கள்.. இதைத் தவிர்த்து இந்தியா முழுவதும் எழுபதிற்கும் மேற்பட்ட  முன்னணி பண்பலை வானொலி நிலையங்கள், தேசிய செய்தி சேனல்கள், திறந்த வெளி விளம்பர பலகைகள், இசையை ஸ்ட்ரீமிங் செய்யும் டிஜிட்டல் தளங்கள், டிக்கெட் பார்ட்னர்கள், திரையரங்குகள், வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் என அனைத்து முக்கிய சமூக ஊடக தளங்களிலும் மே 29 ஆம் தேதியன்று மதியம் 12 மணியளவில் ஒரே தருணத்தில் இந்தப் பாடல் வெளியாகிறது.

அதிர்ச்சி! வாணி ராணி... பாண்டவர் இல்லம் சீரியல்களின் இயக்குனர் ஓ.என்.ரத்னத்தின் மனைவி திடீர் தற்கொலை!

ஓம் ராவத் இயக்கியிருக்கும் 'ஆதி புருஷ்' திரைப்படத்தை டி சிரீஸ் பூஷன் குமார்‌ & கிரிஷன்குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார் மற்றும் ரெட்ரோ ஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ஜூன் மாதம் 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

தீபாவளி ரேஸில் இணைந்த ஜப்பான்! கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான வேற லெவல் இன்ட்ரோ டீசர்!

ராமாயண கதையை அடிப்படியாக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் பிரபாஸ், ராமராக நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சனோன் சீதாவாக நடித்துள்ளார். ராவணனாக பாலிவுட் நடிகர் சைப் அலிகான் நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!