கடைசி நேரத்தில் மாஸ்டருக்கு வந்த சோதனை.. நிதி நெருக்கடியால் தயாரிப்பாளர் எடுத்த முடிவு.! வேதனையில் டைரக்டர்.!

By Selva KathirFirst Published Mar 3, 2020, 10:30 AM IST
Highlights

நடிகர், நடிகைகள், டெக்னீசியன்கள் சம்பளம் தவிர்த்து சுமார் 70 கோடி ரூபாய் செலவில் மாஸ்டர் படத்தை எடுத்து முடிக்க திட்டமிடப்பட்டது. வழக்கத்திற்கு மாறாக விஜய் படத்தின் படப்பிடிப்பை அவுட்டோரிலேயே வைத்து எடுக்க முடிவு செய்யப்பட்டதால் தான் பட்ஜெட்டில் கூடுதலாக 20 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட்டது. படத்தை விஜயின் உறவினர் சேவியர் பிரிட்டோ பிலிம்சே தயாரித்த காரணத்தினால் பட்ஜெட்டில் எவ்வித சிக்கலும் இருக்காது என்றே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நினைத்துள்ளார்.

வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பை வேகவேகமாக நடத்தி முடித்துள்ள தயாரிப்பாளரால் இயக்குனர் வேதனை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர், நடிகைகள், டெக்னீசியன்கள் சம்பளம் தவிர்த்து சுமார் 70 கோடி ரூபாய் செலவில் மாஸ்டர் படத்தை எடுத்து முடிக்க திட்டமிடப்பட்டது. வழக்கத்திற்கு மாறாக விஜய் படத்தின் படப்பிடிப்பை அவுட்டோரிலேயே வைத்து எடுக்க முடிவு செய்யப்பட்டதால் தான் பட்ஜெட்டில் கூடுதலாக 20 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட்டது. படத்தை விஜயின் உறவினர் சேவியர் பிரிட்டோ பிலிம்சே தயாரித்த காரணத்தினால் பட்ஜெட்டில் எவ்வித சிக்கலும் இருக்காது என்றே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நினைத்துள்ளார்.

இதற்கிடையே படத்திற்கு தயாரிப்பாளர் பிரபலம் ஒருவரிடம் பைனான்ஸ் கேட்டிருந்ததாக சொல்கிறார்கள். கடைசி கட்ட படப்பிடிப்பு முழுக்க முழுக்க அந்த பைனான்சியர் கொடுக்கும் பணத்தில் தான் எடுக்க திட்டமிடப்பட்டிருந்ததது. ஆனால் அவர் வீட்டில் சிக்கிய பணம் வருமான வரித்துறை வசம் சென்றதால் மாஸ்டர் படப்பிடிற்கு செல்ல வேண்டிய பணம் தடைபட்டதாக கூறுகிறார்கள். அதே சமயம் திடீரென அவுட்டோர் படப்பிடிப்பிற்கு தேவையான மிகப்பெரிய தொகையை தயாரிப்பாளராலும் புரட்ட முடியவில்லை என்கிறார்கள்.

விஜய் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியதை தொடர்ந்து அவர் படத்திற்கு பைனாஸ் செய்யவும் முன்னணி பைனான்சியர்கள் மறுத்துள்ளனர். விஜய் படத்திற்கு பைனான்ஸ் செய்யப்போய் வருமான வரித்துறை, அமலாக்கத்துறையிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று அவர்கள் ஒதுங்கியுள்ளனர். இதனால் திட்டமிட்டபடி மாஸ்டர் படத்தின் இறுதிகட்ட காட்சிகளை எடுக்க முடியவில்லை என்கிறார்கள். இருக்கும் பணத்தை வைத்து பட்ஜெட்டை சுருக்கி கடைசி 20 நாள் படப்பிடிப்பு எடுத்ததாக சொல்கிறார்கள்.

அதிலும் ஒரு சில நாட்கள் பணப்பாற்றாக்குறை காரணமாக சூட்டிங்கே நடைபெறவில்லை என்கிற பேச்சும் அடிபடுகிறது. மேலும் கிளைமாக்ஸ் காட்சியை படு மாசாக சூட் செய்ய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருந்ததாகவும் இதற்காக ஒரு தொகை படத்தின் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள். ஆனால் கடைசி நேரத்தில் பைனான்சியர்கள் கையை விரித்த நிலையில் தயாரிப்பாளராலும் அந்த பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. இதற்கிடையே நடிகர், நடிகைகளின் கால்ஷீட் வீணாக ஆரம்பித்துள்ளது.

தற்போது விஜய் சேதுபதியை விட்டால் அவர் வேறு படங்களில் கொடுத்துள்ள டேட்டை மீண்டும் மாஸ்டருக்கு கொடுக்க முடியாது. இதனால் படத்தின் கதையே மாறிவிடும் என்பதால் இயக்குனரும் இருக்கும் பணத்தை கொண்டு வேண்டா வெறுப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளை சூட் செய்ததாக பேச்சு அடிபடுகிறது. மேலும் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட வேண்டும் என்பதில் தயாரிப்பாளர் உறுதியாக இருப்பதாகவும், எனவே கடைசி நேரத்தில் அவசர அவசரமாக சூட்டிங்கை நடத்தி முடித்துள்ளார்கள்.

அவசர கோளத்தில் எடுக்கப்பட்டதால் லோகேஷ் கனகராஜ் எதிர்பார்த்த பினிசிங் சில காட்சிகள் இல்லை என்றும் அவரது உதவி இயக்குனர்கள் வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள். இதனால் சில நாட்களாகவே லோகேஷ் அப்செட்டாகவே காணப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

click me!