
நாசரின் மகன் ஃபைஸலின் பிறந்த நாளுக்கு திடீர் விசிட் அடித்து மொத்த குடும்பத்தையும் கண் கலங்க வைத்துள்ளார் நடிகர் விஜய். ஃபைஸல் 2014ம் ஆண்டு சென்னை ஈ.சி.ஆர் சாலையில் நடந்த விபத்து ஒன்றில் மிக பயங்கரமாக அடிபட்டு சில ஆண்டுகள் படுத்த படுக்கையாகக் கிடந்தார். அவருடைய புகைப்படங்கள் கூட வெளியிடப்படாமல் தவிர்க்கப்பட்டன.
இந்த நிலையில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட ஃபைஸலின் பிறந்த நாளை அவரது குடும்பத்தினர் இரு தினங்களுக்கு முன்பு மிக எளிமையாகக் கொண்டாடினர். அந்த நேரத்தில் சர்ப்ரைஸாக நாசர் வீட்டுக்கு வந்த விஜய் ஃபைஸலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி, கேக் ஊட்டிவிட்டு பரிசும் கொடுத்தார்.விஜயின் தீவிர ரசிகரான ஃபைஸல் தனது பிறந்த நாளுக்கு வந்த தளபதியைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
இது குறைத்து ட்விட்டரில் பதிவிட்ட அவரது தாய் கமீலா நாசர்...பிறந்த நாள் வாழ்த்துகள் மகனே...இன்று உன் கனவை நனவாக்க விஜய் அண்ணாவே வாழ்த்த வந்துவிட்டார். இதைவிட வேறென்ன வேண்டும். உனது மகிழ்ச்சி நீடிக்க எல்லாம் வல்ல இறைவன் உன்னோடு இருப்பார்’ என்று வாழ்த்தியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.