
'சுக்ரன்' என்ற படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. இதையடுத்து வேட்டைக்காரன், வேலாயுதம், காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும் என பல்வேறு சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தார்.
இதையடுத்து கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 'நான்' என்ற படத்தின் மூலம் விஜய் ஆண்டனி தமிழ் திரையுலகில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அந்த படம் ஹிட்டானதால் தொடர்ந்து வித்தியசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். குறிப்பாக இவர் நடித்த பிச்சைக்காரன் படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
தற்போது இவர் கைவசம் தமிழரசன், அக்னி நட்சத்திரம், கொலை, பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன் என ஏராளமான படங்கள் உள்ளன. இதில் பிச்சைக்காரன் 2 படம் மூலம் விஜய் ஆண்டனி இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.
இவ்வாறு பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வரும் விஜய் ஆண்டனி, தற்போது நிலவி வரும் கொரோனா லாக்டவுன் சூழலால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை பார்த்து விரக்தியில் டுவிட் ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், ஏழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும். எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி, உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும். வாழ்க வளமுடன்” என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவை ஆதரித்தும், எதிர்த்தும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.