தல அஜித் குறித்து ஓபனாக பேசிய விஜய்யின் தாயார்..!! அவரது மனைவியையும் விட்டு வைக்க வில்லை..!!

Published : Dec 22, 2019, 04:36 PM IST
தல அஜித் குறித்து ஓபனாக பேசிய விஜய்யின் தாயார்..!!  அவரது மனைவியையும் விட்டு வைக்க வில்லை..!!

சுருக்கம்

 ஆனால் ரசிகர்கள் இருவரையும் அப்படி பார்ப்பதில்லை,  அவர்கள் நீ பெரிய ஆளா நான் பெரிய ஆளா என்றுதான் பார்க்கிறார்கள் . 

நடிகர் அஜித் குடும்பத்துடன் நாங்கள் நெருக்கமாக இருக்கிறோம் என நடிகர் விஜய்யின் தாயார் கூறியுள்ளார் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக அஜித் விஜய் இருவரும் வலம்வந்தாலும்,  அவர்களின் ரசிகர்கள் எதிரும் புதிருமாகவே இருக்கின்றனர் .  அஜித்தும் விஜயும் நண்பர்களாக இருந்தாலும் அவர்கள் இருவரையும் நேரெதிர் போட்டியாளர்கள் ஆகவே அவர்களது ரசிகர்கள் பாவிக்கின்றனர் .  ட்விட்டர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவர்களது ரசிகர்  மோதிக்கொள்வதால்  அது ஒரு போர்களமாகவே மாறிவிடுகிறது.  சில நேரங்களில்  இரண்டு தரப்பு ரசிகர்களும் எல்லைமீறி ஒருவரையொருவர் மிகக் கீழ்த்தரமான வார்த்தைகளில் வசைபாடிக்கொள்வதும் வாடிக்கையாகி வருகிறது. 

\

இடையிடையே  தங்களின்  ஹீரோக்களும்  தங்களது படங்கள் ரிலீஸாகும் நேரத்திலும் படங்களிலும் ஒருவரை மாற்றி ஒருவர் விமர்சித்துக் கொள்வது  வாடிக்கையாகி வருகிறது . இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நடிகர் விஜய்யின் தாயார் பேட்டி அளித்துள்ளார் அதில் , ராஜாவின் பார்வையிலே படத்தில் விஜய்-அஜித் இருவரும் இணைந்து நடித்த காலத்திலிருந்து  நாங்கள்  இரு குடும்பமும்  நண்பர்களாக இருந்து வருகிறோம் .  ஷாலினி விஜயுடன் காதலுக்கு மரியாதை படத்தில் நடித்திருக்கிறார் ,  ஷாலினியை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தியது என் கணவர்தான் .  அன்றிலிருந்து இன்றுவரை அந்த நட்பு தொடர்கிறது .  ஆனால் ரசிகர்கள் இருவரையும் அப்படி பார்ப்பதில்லை,  அவர்கள் நீ பெரிய ஆளா நான் பெரிய ஆளா என்றுதான் பார்க்கிறார்கள் . 

 துரதிர்ஷ்டவசமாக அதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்றார் ,  தொடர்ந்து பேசிய அவர்,  விஜய் சமையலில்  தோசை நன்றாக சுடுவார்.  இப்பொழுது கூட அவரது வீட்டுக்கு சென்றாள் என்ன தோசை வேண்டும் எனக் கேட்டு அவரை தோசையை தயார் செய்து வருவார் என்று கூறினார்.  விஜயுடன் இணைந்து பாட தனக்கு ஆசை என்று தெரிவித்த அவர்,  இளமையில் குறும்புத் தனமாக இருந்த விஜய் அவரது தங்கை இறப்புக்குப் பின்னர் அமைதியாக மாறிவிட்டார் என தெரிவித்தார், மட்டன் பிரியாணி என்றால் விஜய்க்கு அவ்வளவு பிரியம் என்றும் அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் தெரிவித்தார்.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அடிபொலியாக இருந்ததா குற்றம் புரிந்தவன் வெப் சீரிஸ்...? முழு விமர்சனம் இதோ
துருப்புச்சீட்டாக மாறிய விசாலாட்சி! ஆதி குணசேகரனை காப்பாற்றுவாரா? கம்பி எண்ண வைப்பாரா? எதிர்நீச்சல் தொடர்கிறது