
நம்புங்க... சத்தியமா சொல்றேன் எனக்கு ஒண்ணுமே தெரியாது..! எதார்த்தமாக பேசிய நடிகர் வடிவேலு..!
"pray for nesamani " என்ற ஹேஸ்டேக் உலகம் முழுவதும் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனதை தொடர்ந்து அந்த குறிப்பிட்ட காட்சியில் நடித்த நடிகர் வடிவேலு நடிகர் ரமேஷ் கண்ணா, சார்லி, விஜய், சூர்யா மீது மக்கள் பார்வை பட்டது, காரணம் 18 வருடங்களுக்கு முன்பாக வெளிவந்த திரைப்படமான ஃபிரண்ட்ஸ் திரைப்படத்தைப் பற்றி மக்கள் பரவலாக பேச தொடங்கி விட்டனர்.
இது குறித்து இந்த கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்களிடம் பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் தொடர்புகொண்டு பேட்டி கண்டனர். அந்த வகையில் வைகைப்புயல் வடிவேலுவை ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தொடர்பு கொண்டு பேசிய போது,
"அப்படியா! சத்தியமா சொல்றேன் நம்புங்க... எனக்கு இதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. இந்த ஃபேஸ்புக், ட்விட்டர் இதுல எல்லாம் நான் கிடையாது...அதை யூஸ் பண்ணவும் தெரியாது ... நீங்களா ஏதோ போடுறீங்க.. நீங்களா ஏதோ கேக்குறீங்க.. எனக்கு அதைப் பத்தி ஒன்னுமே தெரியல என தெரிவித்து இருந்தார்.
பின்னர் சில மணி நேரம் குறித்து வடிவேலின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நேசமணி ட்ரெண்டிங் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டுள்ளார். பின்னர் மீண்டும் இந்த நிகழ்வு பற்றி பேசும்போது பதினெட்டு வருடம் கழித்து அந்த படத்தில் இடம் பெற்ற ஒரு குறிப்பிட்ட காட்சி மக்கள் மனதில் இந்த அளவிற்கு பேசப்பட்டதை நினைத்து பெருமைப்படுகிறேன் என தெரிவித்து உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.