சூர்யா - விஜய் பற்றிய கேள்வி! ஒத்த வார்த்தையில் பதில் கொடுத்த சாய் பல்லவி!

Published : May 31, 2019, 04:43 PM IST
சூர்யா - விஜய் பற்றிய கேள்வி! ஒத்த வார்த்தையில் பதில் கொடுத்த சாய் பல்லவி!

சுருக்கம்

நடிகை சாய் பல்லவி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள என்.ஜி.கே திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று கூறி, தொடர்ந்து கலவையான விமர்சனங்கள் மட்டுமே எழுந்து வருகிறது.  

நடிகை சாய் பல்லவி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள என்.ஜி.கே திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று கூறி, தொடர்ந்து கலவையான விமர்சனங்கள் மட்டுமே எழுந்து வருகிறது.

மேலும் சூர்யாவின் மனைவியாக இதில் நடித்துள்ள சாய் பல்லவி நடிப்பு ஒரு சில காட்சிகளில் எடுபட்டாலும், பல காட்சிகளில் பொம்மையாக மட்டுமே வந்து செல்கிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் அஸ்க் சாய்பல்லவி என்கிற ஹாஷ் டாக் மூலம் ரசிகர்கள் எழுப்பிய ஸ்வாரஸ்யமான பல கேள்விகளுக்கு சாய் பல்லவி பதிலளித்தார்.

இதில் ஒரு ரசிகர், என்ஜி.குமரன் பற்றி சொல்லுங்கள் கேள்வி எழுப்பியதற்கு ஒரே வார்த்தையில் " Eccentric ' (விசித்திரமானவர்) என பதில் கொடுத்தார்.

மற்றொரு விஜய் ரசிகர், நடிகர் விஜய் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர். இதற்கு சாய் பல்லவி 'Charismatic ' (கவர்ச்சியானவர்) என பதில் கொடுத்தார். ஒரே வார்த்தையில் சாய் பல்லவி சூர்யா - விஜய் என இருவரை பற்றியும் பதில் கொடுத்த விதத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துப்பாக்கி கொடுத்தவருடன் மோதும் எஸ்கே – ஜன நாயகன் படத்துக்கு பராசக்தி போட்டி; ஜன.,10ல் ரிலீஸ்!
கிழிந்த ஆடை அணிந்த டாக்ஸிக் நடிகை: விலை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!