
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக பிரபலங்களால் சர்ச்சை நடிகையாக பார்க்கப்படும், நடிகை ஸ்ரீ ரெட்டி தற்போது தமிழ் நாடு அரசியலில் ஈடுபடும் ஆர்வம் உள்ளதாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
.
தெலுங்கு முன்னணி நடிகர் ஒருவரை சமீபத்தில் கூட விடாமல் வெளுத்து வாங்கிய ஸ்ரீரெட்டி, தற்போது தன்னுடைய முழு கவனத்தையும் தமிழ் படங்களில் நடிப்பதில் செலுத்தி வருகிறார்.
ரெட்டியின் டைரி என்கிற பெயரில் உருவாகும் அவருடைய வாழ்க்கை படம் முடிவடைந்தது, அடுத்ததாக ராகவா லாரன்ஸ் எடுக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் தற்போது தெலுங்கானாவில் வெற்றி பெற்ற YRS காங்கிரஸ் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்து கூறி அவருக்கு ஆதரவு தெரித்துள்ளதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி. மேலும் தமிழ் நாட்டு அரசியலிலும் ஆர்வம் உள்ளதாக கூறியுள்ளார். எனவே, விரைவில் இவர் அரசியல் கட்சி ஒன்றில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.