வெல்டன் விஷால்....ஒரு முழு கிராமத்தை தத்தெடுத்தார்...

By vinoth kumarFirst Published Nov 25, 2018, 1:30 PM IST
Highlights

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தலைவரான விஷால் கஜா புயல் நிவாரணப் பணிகளில் தன் பங்களிப்பாக ஒரு முழு கிராமத்தைத் தத்தெடுத்தார். ‘இப்புயல் சேதத்திலிருந்து இந்த கிரமத்தை மீட்பது மட்டுமின்றி வாழ்நாள் முழுவதும் இக்கிராமத்தின் காவலனாக இருப்பேன்’ என்று சூளுரைத்திருக்கிறார் விஷால்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து நிவாரண பொருட்கள், நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடிகர், நடிகைகளும் நிவாரண நிதி அளித்து வருகிறார்கள். நடிகர்கள் விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, ஜோதிகா, ஜிவி பிரகாஷ் போன்ற ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நிதி உதவி அளித்துள்ளனர். அஜித் மிகத்தாமதமாக, அதே சமயத்தில் மிகக்குறைவாக 15 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கியுள்ளார்.

இந்நிலையில் பலருக்கும் முன்னுதாரணமாக,  நடிகர் சங்க தலைவர் விஷால் புயலால் பாதித்த ஒரு கிராமத்தை தத்தெடுத்து இருக்கிறார். கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் கடும் பேரழிவை சந்தித்திருக்கிறது. அதில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள கார்க்வயல் என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளார் விஷால்.

இதை  தற்காலிகமாக  நடவடிக்கையாக இல்லாமல்,  என் வாழ்நாள் முழுமையும் இக்கிராமத்துக்கு துணை நின்று  மறு சீரமைப்பு செய்து இந்தியாவிலேயே ‘சிறந்த கிராமமாக‘ கார்க் வயலை மாற்றுவேன் என்றும் அந்த கிராம மக்களுக்கு உறுதியளித்துள்ளார். விஷாலின் உதவிக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்போம்’ என்று அந்த கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

click me!